சென்னை, நவ. 17- “ஸ்டாலின் தமிழ்நாட்டின் வழிகாட்டி! இந்தியாவின் திசை காட்டி!!” எனும் தலைப்பில் சென்னை தெற்கு மாவட்ட முரசொலி வாசகர் வட்டத்தின் சார்பில் மூன்றாவது கருத்தரங்கம் 15-11-2025 மாலை 6:00 மணி அளவில் சைதாப்பேட்டை பஜார் சாலையில் அமைந்துள்ள சென்னை தெற்கு மாவட்ட கழக கலைஞர் அரங்கத்தில் மாவட்ட அமைப்பாளர் தடா
ஒ. சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்க உரையை அமைச்சர் மற்றும் மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிர மணியன் ஆற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பான ஒரு சிறப்புரையை தி.செந்தில்வேல் ஆற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த்ரமேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் வாசுகி பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, நொளம்பூர் வே.ராஜன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் களக் காடி எல்லப்பன், மின்னல் கந்தப்பன், எஸ்.ஏ.அரிகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர்.கிருஷ்ணகுமார், கோட்டூர் எம்.பிரகாஷ் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மணிகண்டன் நாடிமுத்து, நிஷா சையத், மற்றும் பகுதி இளைஞரணி நிர்வாகிகள் வாசர் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
