வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததால் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா @AsiriyarKV அவர்களால் #திமுக75 அறிவுத்திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க இயல வில்லை. சென்னை திரும்பிய ஆசிரியர் அவர்களை, பெரியார் திடலில் சந்தித்து, ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வழங்கினோம். ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலின் உள்ளடக்கம், முரசொலி ‘பாசறை’ பக்கத்தின் சிறப்பு, அறிவுத்திருவிழா நடைபெற்றுகொண்டிருக்கும் விதம்… என நம் முன்னெடுப்புகள் குறித்து ஆர்வத்துடன் பேசி பாராட்டியவர், தொடர்ந்து ஆற்ற வேண்டிய கொள்கைப் பணிகள் குறித்தும் வழிகாட்டுதல்களை வழங்கினார். ஆசிரியர் அய்யா அவர்களின் அரவணைப்பில் கொள்கைப் பணி தொடர்வோம்! என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
டுவிட்டரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
