சிங்கப்பூரில் நடைபெற்ற “பெரியார் விழா -2025”இல் பங்கேற்றுச் சிறப்பித்த, சிங்கப்பூர் அல்ஜுனிட் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் ஜெகதீஸ்வரன் ராஜு, நிகழ்வில் பங்கேற்றது குறித்துத் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு:
Celebrating the Spirit of Periyar:
It was truly an honour to be part of Periyar Vizha 2025, organised by the Periyar Community Service of Singapore (பெரியார் சமூக சேவை மன்றம் சிங்கப்பூர்). The event was filled with warmth, inspiration and a deep sense of pride in the values that Periyar stood for, values of rationalism, self respect and women’s rights. I was delighted to meet so many familiar faces, community leaders and young changemakers who continue to uplift our Indian community in Singapore. Congratulations to Mr Mashuthoo, recipient of the Periyar Award, and Mrs Susila, recipient of the Periyar Perunthondar Award, for their remarkable service and dedication. The heartfelt speeches by our youths Mr Arun Oswin, Mr Sundar and Ms Tamilmathi, along with the inspiring words from Dr Veeramani from India, left a lasting impact on everyone present. #Tamil #Community #Culture #Dedication #Women
இதன் தமிழாக்கம் வருமாறு:
பெரியாரின் உணர்வைக் கொண்டாடுதல்:
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “பெரியார் விழா 2025”-இல் பங்கேற்றது உண்மையிலேயே பெருமைக்குரிய ஒன்றாகும். பெரியார் நிலைநாட்டிய பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணுரிமை ஆகிய விழுமியங்களில் மிகுந்த மகிழ்ச்சியும், ஊக்கமும் ஆழ்ந்த பெருமையும் நிறைந்ததாக அந் நிகழ்வு அமைந்திருந்தது.
சிங்கப்பூரில் நமது இந்திய சமூகத்தை தொடர்ந்து மேம்படுத்தும் பழக்கமான பல முகங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் மாற்றத்தைத் தர வல்ல இளைஞர்களைச் சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
பெரியார் விருது பெற்ற மசூது, பெரியார் பெருந்தொண்டர் விருது பெற்ற சுசீலா ஆகியோர் ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவைகளுக்காகவும், அவர்களின் அர்ப்பணிப்புக்காகவும் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது இளைஞர்களான அருண் ஆஸ்வின், சுந்தர், தமிழ்மதி ஆகியோரின் இதயப்பூர்வமான உரைகளும், இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் கி.வீரமணி அவர்களின் ஊக்கமளிக்கும் உரையும் அங்கு கூடியிருந்த அனைவரின் மனதிலும் நீங்கா நினைவாகப் பதிந்தன.
