மோசமான ரயில் விபத்துகள் குறித்து ரயில்வே நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

2 Min Read

மக்களவைத் தலைவருக்கு  நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்!

தமிழ்நாடு

சென்னை, நவ. 8- மோச­மான ரயில் விபத்­து­கள் குறித்து ரயில்வே நிலைக்­குழு விவா­திக்கநட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று மக்­க­ள­வைத் தலை­வர் ஓம்.பிர்­லா­வுக்கு தி.மு.க. பொரு­ளா­ள­ரும் நாடா­ளு­மன்ற தி.மு.க. குழுத் தலை­வ­ரு­மான டி.ஆர்.பாலு கடி­தம் எழு­தி­யுள்­ளார்.

நாடாளுமன்ற மக்­க­ள­வைத் தலை­வர் ஓம்.பிர்­லா­வுக்கு தி.மு.க. பொரு­ளா­ளரும் மக்களவை உறுப் பினருமான டி.ஆர்.பாலு எழு­தி­யுள்ள கடி­தம் வரு­மாறு:-  “சமீ­ப­மாக இரண்டு பெரிய ரயில் விபத்­து­கள் ஏற்­பட்டு ஏரா­ள­மா­னோர் பலி­யா­ன­து­டன் பல­ரும் படு­கா­யம் அடைந்­துள்­ள­னர். அத்­து­டன் குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு ரயில்வே சொத்­துக்­­களும் நாச­மாகி உள்­ளன.

2.6.2023 அன்றுஒடிசா மாநி­லம் பாலா­சார் மாவட்­டத்­தில் ஏற்­பட்ட முத­லா­வது ரயில் விபத்­தில், 2 ரயில்­கள் நேருக்கு நேர் மோதிக்­கொண்டு 296 பய­ணி­கள் பலி­யா­ன­து­டன், 1200 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர்.

1995 ஆம் ஆண்டு பிரோ­ஜா­பாத்­தில் நடை­பெற்ற ரயில் விபத்­திற்­குப் பிறகு நடந்த விபத்­தைக் காட்­டி­லும் மிக­வும் மோச­மா­னது என்­ப­தோடு, உல­கம் முழு­வ­தி­லும் 2004ஆம் ஆண்­டிற்­குப் பிறகு நடை­பெற்ற மிக­வும் பேர­ழிவு என்று தான் இந்த ரயில் விபத்து குறித்து குறிப்­பிட வேண்­டி­யுள்­ளது.

ரயில்வே அமைச்­ச­ரும், மூத்த அதி­கா­ரி­க­ளும் விபத்து நடை­பெற்ற இடத்­திற்கு விரைந்து சென்று, பல நாட்­கள் முகா­மிட்டு நிவா­ர­ணப் பணி­கள், மீட்­புப் பணி­கள் மேற்­கொண்­ட­னர் என்­பது வருத்­தத்­திற்­கு­ரிய ஒன்று. இந்த விபத்து குறித்து சி.பி.அய். விசா­ரணை மேற்­கொண்டு வரு­கி­றது என்று நான் கரு­து­கி­றேன். மேற்­கொண்டு என்ன நடக்­கி­றது என்று தெரி­ய­வில்லை.

இரண்­டா­வது ரயில் விபத்து அண்­மை­யில் 29.10.2023 அன்று ஆந்­திர மாநி­லம் விஜய நக­ரம் பகு­தி­யில் நடந்­தது. இரண்டு பய­ணி­யர் ரயில்­கள் ஒன்­று­டன் ஒன்று மோதிக் கொண்­ட­தில் 14 பேர் பலி­யா­ன­து­டன் 50 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர். மனி­தத் தவ­று­கள் இந்த விபத்­து­க­ளுக்கு கார­ணம் என்று சொல்­லப்­ப­டு­கி­றது. அதி­கா­ர­பூர்­வ­மாக எது­வும் தெரி­ய­வில்லை. மேலே குறிப்­பிட்ட இரண்டு விபத்­து­க­ளும் வருத்­த­ம­டை­யக் கூடிய ஒன்று. 5 மாத இடை­வெ­ளி­யில் இந்த இரண்டு ரயில் விபத்­து­கள் நடந்­தி­ருப்­பது அனைத்துத் தரப்­பி­ன­ரை­யும் கவ­லை கொள்­ளச் செய்­துள்­ளது.

இந்த விபத்­து­கள் தொடர்­பான முழு விப­ரங்­கள் எது­வும் ரயில்வே நிலைக்­கு­ழு­விற்கு தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. கெட்ட வாய்ப்பான கவ­லைக்­கு­ரிய இந்த விபத்­து­கள் குறித்து நாட்­டில் உள்ள மற்­ற­வர்­க­ளைப் போல ரெயில் நிலைக்­குழு உறுப்­பி­னர்­க­ளும் மிக­வும் வருத்­த­ம­டைந்­துள்­ள­னர். சிறீலங்­கா­வில் 2004 ஆம் ஆண்டு நடை­பெற்ற மோச­மான ரயில் விபத்­தைக் காட்­டி­லும் ஒடிசா விபத்து மிக மோச­மா­னது என்­ப­தால் அதை நிலைக்­கு­ழு­வின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தி­ருக்க வேண்­டும்.

5 மாதங்­கள் கடந்­தும் அவ்­வாறு நிலைக்­கு­ழு­வின் கவ­னத்­திற்குக் கொண்டுவர­வில்லை.

பொது முக்­கி­யத்­து­வத்தை கருத்­தில் கொண்டு, தாங்­கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்துமேற்­கு­றிப்­பிட்ட வேண்­டு­ மென்றேநடை­பெற்ற ரயில் விபத்­து­கள் பற்றி ரயில்வே நிலைக்­குழு விரி­வாக விவா­திக்­கும் வாய்ப்­பினை ஏற்­ப­டுத்­தித் தரும்­படி கேட்­டுக்­கொள்­கி­றேன்.” 

இவ்­வாறு  தி.மு.க. பொரு­ளா­ளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு  தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *