தலைக்கு மேல் தொங்கும் தூக்குக் கயிறு!

2 Min Read

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் நான்கு மாதங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆசியாவின் மூன் றாவது பெரிய பொருளாதார நாடாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடாகவும் உயர்ந்துள்ள இந்தியாவில் வேலை செய்யத் தயாராக இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் சரியான திட்டங்களை ஒன்றிய அரசால் ஏற்படுத்த இயலாமையால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது

சீனாவுக்கு இணையாக உற்பத்தியிலும், ஏற்று மதியிலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அளவு நான்கு மாதங்களாக உச் சத்தைத் தொட்டு உள்ளநிலை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குப் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதென்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசிற்குப் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக 2024ஆம் ஆண்டில்  பொதுத் தேர்தல் வரும் வேளையில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் முக்கியப் பிரச்சினையாக வெடிக்கும்.

“ஏப்ரல் மாதம் வேலைவாய்ப்பு சந்தையில் மக்களின் பங்கீடு 25.5 மில்லியன் அதிகரித்து 467.6 மில்லியனாக உயர்ந்தாலும், நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 7.8% ஆக இருந்து ஏப்ரல் மாதத்தில் 8.11% ஆக உயர்ந்துள்ளது” என்கிறார் – இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மய்ய அமைப்பின் தலைவர் மகேஷ் வியாஸ். “வேலை வாய்ப்பின்மை விகிதம் டிசம்பர் மாதத்திற்குப் பிறகு மிகவும் அதிகமாகும். ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம்   9.81% ஆக உயர்ந்துள்ளது. அதே காலக்கட்டத்தில் கிராமப்புற வேலை வாய்ப்பின்மை 7.47% ஆக இருந்த நிலையில் 2023 ஏப்ரல் மாதத்தில் 7.34% ஆக குறைந்துள்ளது” என்று ‘சென்டர் பார் மானிட் டரிங் இந்தியா எகனாமி’யின் தரவு தெரிவிக்கிறது.

“ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்ட 22.1 மில்லியன் வேலைவாய்ப்புகளில் சுமார் 87 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு சரிந்துள்ளது. இதேபோல் ஏப்ரல் மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் மார்ச் 2020க்குப் பின்பு அதிகப்படியாக 38.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பன்னாட்டு பொரு ளாதார சூழ்நிலைகள் காரணமாக பணி நீக்கம்  வரும் என்ற அச்சத்தில் இந்திய ஊழியர்கள் இருக்கும் வேளையில், அதிகப்படியான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டும், வேலை வாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. இது கூடுதல் பீதியைத்தான் அளித்துள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று ‘வீர வசனம்’ பேசிய நரேந்திர மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு 2024 மக்களவைத் தேர்தலைச் சந்திப்பார்?

அதுவும் 18 வயது நிறைந்த புதிய வாக் காளர்கள் மோடி அரசை எதிர்த்துக் கேள்விக் குறியாகப் பாய மாட்டார்களா?

சொன்ன வாக்குறுதி என்னாயிற்று என்று கேட்டால் ஏன் ‘பக்கோடா’ விற்கலாமே என்று ஒரு பிரதமர் பேசுவது எத்தகைய பொறுப்புணர்ச்சி?

இளைஞர்களே, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நமது தலைக்கு மேல் தொங்கும் தூக்குக் கயிறு!

எச்சரிக்கை! எச்சரிக்கை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *