சென்னை, நவ.11 தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சேஜோங் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய ‘திருக்குறள் மாநாடு’ முதல் முறையாக நடைபெற்றது.
திருக்குறள் கலந்துரையாடல்
திருக்குறளை முதன் முதலாக அய்ரோப்பிய மொழி யான லத்தீனில் 1730இல் மொழிபெயர்த்த இத்தாலிய ஆய்வாளரான ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) பிறந்த நாளான நவ.8ஆம் தேதி இந்த மாநாடு நடைபெற்றது.
தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் ஏற் பாட்டில் ‘காலம் கடந்த உண்மைகள் சமூகம், அரசியல், பண்பாடு முதல் உலகளா விய பொருத்தம் வரை’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட் டில் திருக்குறளின் தத்துவங் களை நவீன உலகின் பல் வேறு துறைகளில் பயன்படுத் துவது குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
கூட்டு முயற்சி
10க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த 3 கட்டுரைகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மாநாட்டில் பல்வேறு தமிழ் அறிஞர்கள், இலக்கிய சேவையாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தமிழ் பண்பாட்டு மய்யம் நிறுவுதல், இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திட்டம். இந்தியாதென் கொரியா கல்வி கூட்டு முயற்சி சார்ந்த நீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு தலைவர் எஸ்.ஆரோக்கியராஜ், துணைத் தலைவர் சகாய டர்சியூஸ். செயலாளர் டி.ஞானராஜ், மக் கள் தொடர்பு அதிகாரி சாந்தி பிரின்ஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டுவரும்
ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸ்திரேலியாவுக்கு தப்பி ஓட்டம்
சனூர் (பஞ்சாப்), நவ.11 பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஹர்மித் சிங் பதன்மர்ஜா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றார்.
பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் கொடுத்த புகார்படி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி சனூர் தொகுதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர்.
செப்டம்பர் 2 அன்று அரியானாவில் உறவினர் வீட்டில் இருந்த ஹர்மீத் சிங்கை கைது செய்ய சென்ற காவல்துறையினர்மீது அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்து காரில் தப்பிச் சென்ற ஹர்மீத் சிங்கை காவல்துறையினர் தேடி வந்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதற்கிடையே அவருக்கு காவல்துறையினர் ‘லுக் அவுட்’ அறிக்கை பிறப்பித்தது. இந்நிலையில் ஹர்மீத் சிங் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் பஞ்சாபி இணைய சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மூலம் இது தெரியவந்துள்ளது.
அந்த பேட்டியில், தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் சதி என்றும் தனக்கு ஜாமீன் கிடைத்ததும் நாடு திரும்புவேன் என்றும் பேசியுள்ளார். மேலும் தனது சொந்த கட்சியினர் குறித்தும் அந்த பேட்டியில் அவர் குறை கூறியுள்ளார்.
