நவம்பர் 28ஆம் தேதி தமிழர் தலைவர் காரைக்குடி வருகிறார் ‘பெரியார் உலகம்’ அமைய உலகத் தமிழர்கள் நன்கொடை தோழர்களே! நீங்களும் தொடங்குங்கள்; இன்றே தொடங்குவதுதான் வெற்றி! காரைக்குடி மாவட்ட கழகத் தலைவர் வேண்டுகோள்

அருமைத் தோழர்களுக்கு வணக்கம்!

நமது எண்ணங்கள் எல்லாம் நவம்பர் 28 நோக்கியே இருக்கிறது.

‘பெரியார் உலகம்’ எனும் தமிழர் தலைவர் ஆசிரியரின் பெருங்கனவை உலகமெங்கும் உள்ள தமிழர்கள், நன்றி எனும் நன்கொடையால் நேர் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சரோ கருஞ்சட்டை வீரர்களின் தன்னலம் கருதா தொண்டறப் பணியை தனது ஒற்றை “சல்யூட்” மூலம் உறுதி செய்தார்.

ஆசிரியரின் அகவை தான் 93. அது அவரின் உடலுக்கு மட்டும் தான்.

உள்ளம் அறிவாசான் பெரியாரைப் போல்,

‘‘மண்டைச் சுரப்பின் உச்சம் அவர்!’’

“பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்”

என்ற முழக்கத்தோடு உலகப் பந்தை சுற்றி வரும் ஒப்பற்ற தலைமை அவர்!

தமிழர்களின் மான வாழ்வுக்கும், சுயமரியாதை உணர்வுக்கும், பெண்ணுரிமைக்கும் வித்திட்ட தலைவர் தந்தை பெரியாரின் வரலாற்றின் நீட்சி அவர்!

நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் நீண்ட வரலாறு அவர்!

இன்றைக்கு பெரியார் சிந்தனைகள் உயிர்ப்போடு இருப்பதற்கு உன்னத சாட்சியவர்!

‘திராவிட மாடல்’ ஆட்சியின் திசை காட்டும் தீரர் அவர்!

அருமைத் தலைவர் ஆசிரியர் நம் காரைக்குடிக்கு வருகிறார்!

தோழர்களே நாம் செய்ய வேண்டியது என்ன?

உற்ற நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், வெளிநாட்டில் வாழும் சொந்த பந்தங்களோடு பேசுங்கள்.

‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது போல கேட்டால் கிடைக்கும்.

என்னால் இவ்வளவு முடியும் என்று ஒரு முடிவு எடுத்துக் கொண்டு பணியைத் தொடங்குவோம்.

“நம்மால் முடியாதது யாராலும் முடியாது.

யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.”  என்கிற ஆசிரியரின் சிந்தனைத் துளி தான் நம் களப்பணிக்கான அருமருந்து!

உற்சாகத்தோடு நான் பணியைத் தொடங்கி விட்டேன்.

நீங்களும் தொடங்குங்கள்! இன்றே தொடங்குவது தான் வெற்றி!

பெரியார் உலக மயம்!

உலகம் பெரியார் மயம்!

– வைகறை

காரைக்குடி மாவட்ட
திராவிடர் கழகத் தலைவர் 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *