தந்தை பெரியாரிடம் எனக்கு பிடித்த, என்னை ஈர்த்த விசயம் பகுத்தறிவு என்கிற ரேசனலிசம். இது பொதுவான மனிதர்கள் அனைவருக்கும் தேவை. “நான் ஒரு விசயத்தை நம்புறேன். அந்த விசயத்தை நீங்க நம்பனும்னு அவசியமில்ல. உங்களுக்கு என்ன கூடாதுன்னு தோணுதோ அதை செய்யுங்க எனக்கு என் மனசுல பட்டத சொல்றேன்.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. யாரையும் நம்ப கூடாதுன்னு சொல்லல. நான் நம்பல. நம்புவதும் நம்பாததும் உங்க தனிப்பட்ட விருப்பம்” என்று பெரியார் கூறுவதோடு நிற்காமல் பகுத்தறிவுக்கு எதிராக நாம செய்ற விசயங்களை ஸ்ட்ராங்காக பெரியார் எதிர்க்கிறார். அத பத்தி அவர் சொல்லியிருக்கிற விசயங்கள் இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்கு மிக மிக தேவை. ஏனென்றால் ஜாதியின் பேராலும் மதத்தின் பேராலும் நம்மை அவர்கள் அடிபணிய வைக்கவும், கவர்ந்து விடவும் நினைக்கிறார்கள். அதை வைத்து பிரிவினையையும், சண்டையையும் நம்மிடையே தூண்டி விடுகிறார்கள். ஆதலால் பெரியாரின் கருத்துகள் நாட்டுக்கே தேவை என்று பெரியார் புத்தக அரங்கத்திற்கு வந்திருந்த சிந்தனையாளர் ஒருவர் பேசியது இன்றைய இந்திய சூழ்நிலைக்கு பெரியாரே தீர்வு என்ற தலைப்பில் Periyar Vision OTT-இல் காணலாம்.
– N.சஞ்சீவி சுந்தரம், மேல்மருவத்தூர்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு : periyarvision.com

