ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் சுயமரியாதைச் சுடரொளி ப. பிரகலாதன் அவர்களது நான்காம் ஆண்டு நினைவு நாள் 09.11.2025 அன்று கடைபிடிக்கப்பட்டது. குருவை தந்தை பெரியார் சிலை அருகே அவரது படத்தை வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்தி “கட்டுப்பாட்டுடன் தமிழர் தலைவர் தலைமையில் சுயமரியாதைச்சுடரொளி ப.பிரலாதன் காட்டிய வழியில் பயணிப்போம்” என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா நற்குணன் தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த. சண்முகம் முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் மணிமாறன், பாலசுப்ரமணியம், நாத்திக சோதி, திருச்சந்திரன், தைரிய மணி, ப.சத்தியமூர்த்தி,, தனபாலன், மணிமாறன், கவுசிகன், யாழ் நிதர்சன், சேகுவேரா, குரல் அமுதன், காவியன் மணிகண்டன், நரேந்திரன், நவீஸ், சஞ்சய், ராஜ சேகர், மதிவாணன், ஜீவரசன், தாளமுத்து, பென் ஜான்சன், ஈஸ்வரி, ஜீவா, ஜெயராணி, பெரியார் பிஞ்சு பொன் சாரா, மாதேஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
