சென்னை, நவ. 10- மின்கட்டணம் வழக்கத்தை விட அதிகமாக வந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் கட்டணம்
தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் மின் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத்தை வசூலித்து வருகிறது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது கட்டணங்களை மாற்றி அமைக்கிறது. அதன்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் ஆண்டுதோறும் கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது.
கட்டண விவரம்
யூனிட் பயன்பாடு ஒரு யூனிட்டுக்கான கட்டணம் 0 – 100 யூனிட் கட்டணம் இல்லை; 101 – 200 யூனிட் அதிக கட்டணம் இருக்காது; 300 யூனிட் அல்லது அதற்கு மேல் கணிசமாக கட்டணம் செலுத்த வேண்டும்; 400 யூனிட் வரை ரூ. 4.95; 401 முதல் 500 யூனிட் வரை ரூ. 6.6;5 501 முதல் 600 யூனிட் வரை ரூ. 8.80; 601 முதல் 800 யூனிட் வரை ரூ. 9.95; 801 முதல் 1,000 யூனிட் வரை ரூ. 11.05; 1,000 யூனிட்டுக்கு மேல் ரூ. 12.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நுகர்வோரின் புகார்
சில பகுதிகளில் 60 நாட்களுக்குப் பதிலாகக் கணக்கீடு தாமதமாகி, 5 நாட்களுக்குப் பிறகு எடுக்கப்படுவதால், யூனிட் வரம்பு உயர்ந்து மின் கட்டணம் கடுமையாக உயர்கிறது. இதனால், செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கான மின் கட்டணம் வழக்கத்தை விடப் பல மடங்கு அதிகரித்து விட்டதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்த தாவது: தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் தற்போது கட்டண உயர்வு குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பல இடங்களில் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் பணி முறையாக நடைபெறவில்லை. இதில் பல பிரச்சினைகள் இருப்பதாக மக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன. வீடுகளுக்கு கூடுதல் மின் கட்டணம் வந் தால், சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் நுகர்வோர் முறையிடலாம். தவறு இருந்தால், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்து வார்கள். மின்வாரிய ஊழியர்களிடம் தவறு இருப்பது கண்டுபிடிக் கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
