
ஆஸ்திரேலியா மெல்ஃபோர்னில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்து விட்டு இன்று (10-11-2025) காலை 10.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த பேராளர்கள் அனைவருக்கும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ேசா.சுரேஷ், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ. நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, தாம்பரம் தோழர்கள் சு. மோகன்ராஜ், குணசேகரன், பூவை தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் சா. தாமோதரன், பொறியாளர் கரிகாலன், தமிழ் இனியன், க. கலைமணி.
