காரைக்குடி. நவ. 9– காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 05.11.2025 அன்று மாலை 5 மணி அளவில் காரைக்குடி குறள் அரங்கில் மாவட்டத் தலைவர் வைகறை தலைமையில் மாவட்டக் காப்பாளர் சாமி. திராவிட மணி, முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் சி. செல்வமணி கடவுள் மறுப்புக் கூறி அனைவருக்கும் வரவேற்று உரையாற்றினார்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தனது உரையில் நவம்பர் 28இல் காரைக்குடி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரின் இதுதான் ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆட்சி. இதுதான் திராவிடம், திராவிட மாடல் ஆட்சி என்று தொடர் பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான வழிகாட்டுதல்களையும், பெரியார் உலகதிற்கு நிதி திரட்டிய அனுபவத்தையும், மக்கள் நன்றிப் பெருக்கோடு நன்கொடை தரத் தயாராக இருப்பதையும், டிசம்பர் 2இல் தமிழர் தலைவர் ஆசிரியரின் 93 ஆவது பிறந்தநாளை தொண்டற விழாவாக எழுச்சியாக நடத்திடவும் மாவட்ட தோழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கினார்.
கழகச் சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா தனதுரையில், நாள்தோறும் பெரியார் உலகம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் கழகத் தலைவரின் எதிர்பார்க்கும் நிதியை திரட்டுவோம் என்றார்.
மாவட்டத் தலைவர் வைகறை தனது உரையில், பெரியார் உலகமெனும் ஆசிரியரின் பெருங்கனவு தமிழர்களின் நன்றி பெருக்கால் விண்ணோக்கி உயர்ந்து வருகிறது. தமிழர் தலைவரின் ஆயுள் நீட்டும் அருமருந்தும் அதுவே. பேரார்வத்தோடு பெருந்தொகை வழங்குவோம் என்றார்.
மாவட்டக் காப்பாளர் சாமி திராவிட மணி தனது உரையில், காரைக்குடிக்கு ஆசிரியர் வருகை நமக்கு பெரும் வாய்ப்பாகும். பெரியார் உலகத்திற்கு எல்லோரும் ஒருங்கிணைந்து முக்கியமானவர்களை சந்தித்து நிதி திரட்டுவோம். ஆசிரியர் மனம் மகிழும் வண்ணம் செயல்படுவோம் என்றார். பொதுக் கூட்ட நிகழ்வுக்காக என் குடும்பத்தின் சார்பாக ரூ பத்தாயிரம் நன்கொடை அளிப்பதாக அறிவித்தார்.
தேவகோட்டை நகர கழகத் தலைவர் வீ. முருகப்பன் ரூ.5000 பெரியார் உலக நன்கொடை வழங்கினார்.
நிகழ்வில் மும்பை மாநில தலைவர் பெ. கணேசன், காரைக்குடி மாநகரத் தலைவர் ந. ஜெகதீசன்,
பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி, ப.க.மாவட்டத் துணைத் தலைவர் முனைவர் செ.கோபால்சாமி, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், அரசூர் நா.கா.செல்வநாதன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் குமரன் தாஸ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் இரா. முத்துலட்சுமி, பெரியார் பெருந்தொண்டர் த. திருமேனி, தேவகோட்டை ஒன்றிய ப.க தலைவர் அ. அரவரசன் நெல்லுபட்டு இராமலிங்கம், உதய பிரகாசு ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் உலக நிதி அறிவித்தோர்:
கொ. மணிவண்ணன் 50,000, தி. என்னாரெசு பிராட்லா 50,000, சி. செல்வமணி 50,000, ந ஜெகதீசன் 5,000, குமரன் தாஸ் 5,000
பெரியார் உலக நிதி திரட்டல் குழு
காரைக்குடி மாவட்டம்:
தலைவர்: சாமி திராவிடமணி
செயலாளர்: ம. கு. வைகறை
பொருளாளர்: ந செல்வராசன்
துணைத் தலைவர்கள்: சி செல்வமணி, ந. ஜெகதீசன், தி.என்னரெசு பிராட்லா
துணைச் செயலாளர்கள்: செல்வம் முடியரசன், ஆ. சுப்பையா, கொ.மணிவண்ணன்
ஒருங்கிணைப்பாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர்
குழு உறுப்பினர்கள்: முனைவர் மு.சு.கண்மணி, மருத்துவர் சு.முழுமதி, சி.சூரிய மூர்த்தி, ஆ.பழனிவேல் ராசன், ஒ.முத்து குமார், அ.பிரவீன் முத்துவேல், கொரட்டி வீ. பாலு, முனைவர் செ. கோபால்சாமி, ந.பாரதி தாசன், இள. நதியா, இரா. முத்து லெட்சுமி, து.அழகர்சாமி, அ.அரவரசன், த.திருமேனி,
தீர்மானங்கள்:
நவம்பர் 28 இல் காரைக்குடி மாநகருக்கு வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து மிக எழுச்சியோடு இதுதான் ஆர் எஸ் எஸ் பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் திராவிட மாடல் ஆட்சி கூட்டத்தை மிக எழுச்சியோடு நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
பெரியார் உலக மய்யம் உலகம் பெரியார் மய்யம் பார்க்கும் முயற்சியில் ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெரியார் உலகம் அமைப்பதற்கு ரூ 10 லட்சம் நிதியை திரட்டி நவம்பர் 28 அன்று அவர்களிடம் வழங்குவதென முடிவு செய்யப்படுகிறது.
பெரியாரின் கரம் பற்றி டிசம்பர் 2ல் 93 வது அகவை தொடும் அய்யாவின் அடிச்சுவட்டில் பீடு நடைபோடும் அருமைத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை விடுதலை சந்தா வழங்கும் விழாவாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
