கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக மாணவர்களுக்கான பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துக்கள் அடங்கிய நூல்கள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன பகுத்தறி வாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு உள் ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.
