இந்நாள் – அந்நாள்

2 Min Read

‘அக்டோபர் புரட்சி’ நவம்பர் 7, (25.10.1917)

அக்டோபர் புரட்சி நடந்து 108 ஆண்டுகள் ஆகின்றன.

19-ஆம் நூற்றாண்டில் அடிமைத் தனத்தை ஆக்கப் பொருளாகக் கொண்ட நாடுகளில் ஒன்றான பிரான்சு, ரஷ்யாவை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. ஜார் மன்னர்களின் கொடுங்கோலாட்சி முடிவுற்று, அக்டோபர் 17, 1917 இல் போல்ஸ்விக் புரட்சி என்னும் ரஷ்யப்புரட்சி தோன்றியது.இப்புரட்சியின் விளைவாக அந்நாட்டில் பொதுவுடைமைத் தத்துவம் மலர்ந்தது.

1917 – ஆம் ஆண்டில் தோன்றிய அந்தப் புரட்சி, பல்வேறு காரணங்களால் எழுந்த ஒன்றாகும். 1894 முதல் 1917 வரை ஆண்ட கடைசி ஜார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ், கொடுங்கோன்மை மிக்கவராயிருந்தார். மக்களின் வறுமை மற்றும் நோய்களைப்பற்றி கவலைப்படாத அவர், ரஸ்புட்டீன் என்னும் மதகுருவிற்கு கட்டுப்பட்டவராகவும், தன் மனைவியின் சொல் கேட்பவராகவும் விளங்கினார்.

மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களும் நிலக்கிழார்களால் துன்பத்திற்குட்படுத்தப்பட்டனர். உழைப்பவர்களுக்கு நிலமற்ற நிலையும், பொருளாதாரத் தட்டுப்பாடுகளும் காணப்பட்டன. கல்வியறிவின்மையாலும், நவீன விவசாய முறைகள் கைக்கொள்ளப்படாமையாலும் விவசாயிகள் வருந்தினர். 1861 இல் இயற்றப்பட்ட அடிமை மீட்சிச் சட்டமும் அவர்களுக்கு யாதொரு முழுப்பயனையும் வழங்கவில்லை. எனவே உரிமை மற்றும் சமத்துவ எண்ணங்களால் உந்தப்பட்ட அவர்கள், கிளர்ச்சிகளை மேற்கொள்ளலாயினர்.

மார்க்ஸின் மூலதனம் (DAS CAPITAL), மக்கள் மனத்தில் புரட்சிக் கருத்துகளுக்கு வித்தூன்றியது. இதனை ஆதாரமாகக் கொண்டே, லெனின் பொதுவுைடமைச் சமுதாயத்தை அமைக்க எண்ணினார். அவருடைய நாவன்மையாலும் பேச்சாற்றாலாலும் மக்கள் விழிப்படைந்தனர்.

1914 – இல் முதலில் புரட்சியாளர்கள், கிரென்ஸ்கி தலைமையில் ஓர் அரசினை தோற்றுவித்தனர். 1917 ஜூலையில் இவர் தலைமையில் ஆட்சி கைப்பற்றப்பட்டது. நடுத்தர வகுப்பினரின் கையில் இருந்த ஆட்சியானது தொழிலாளர்கள், விவசாயிகள் கைகளுக்கு மாற வேண்டுமென இடதுசாரிப் பிரிவினரான சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி விரும்பியது.

தலைமறைவு வாழ்க்கைக்கு பின் 1917இல் தாயகம் திரும்பிய லெனின், சமதர்மக் கோட்பாட்டை நிறுவ கடும் நடவடிக்கைகள் எடுக்கலானார். வலது சாரி பிரிவினராகவும், மிதவாதிகளாகவுமிருந்த மென்ஷ்லிக்குகளை விட லெனின் தலைமையிலான இடதுசாரிகள்,தொழிலாளர்கள், இளைஞர்கள் நிறைந்த போல்ஷ்விக்குகளின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால் செல்வாக்கு லெனின் கைக்கு மாறியது. அன்று முதல் ரசியா, ‘சோவியத் ஒன்றியம்’ என அறிவிக்கப்பட்டது.

மனித இனம் – நகரக் கட்டமைப்பில் வாழத்துவங்கிய் நாள் முதல் சமத்துவத்திற்கான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. இந்த வகையில் சுமார் 4000 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவம் சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட மனித குலத்தை உருவாக்குவதற்காக உலகையே மாற்றிய புரட்சிதான் அக்டோபர் புரட்சி.

பச்சைத் தமிழர் காமராசர் அவர்களை மதவெறி இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் தலைநகர் டில்லியில் தீயிட்டுக் கொல்ல முயன்ற நாள்  இன்று (07.11.1966)

தந்தை பெரியார் அவர்கள் ‘ரிவோல்ட்’ என்ற ஆங்கில இதழ் தொடங்கிய நாள் இன்று (07.11.1928).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *