கிருட்டினகிரி, நவ. 6- கிருட்டின கிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 147 -ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 2.11.2025 அன்று கிருட்டினகிரி பெரியார் மய்யம் அன்னை மணியம் மையார் கூட்டரங்கில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன் தலைமை வகித்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி, ஊற்றங்கரை ஒன்றிய ப.க.தலைவர் இராம. சகா தேவன் ஆகியோர் முன்னிலை வகித்துப்பேசினர்.
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ. திராவிடமணி பேச்சுப் போட்டியை தொடங்கிவைத்து வாழ்த்துரை வழங்கினார்.
நிறைவாக மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலா ளர் அண்ணா சரவணன் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாண வர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
பரிசு பெற்றவர்கள்
சி.பவித்ரா அரசு மகளிர் கலைக்கல்லூரி கிருட்டினகிரி முதல் பரிசு ரூ 3000/-,
மு.சந்தோஷ்குமார் எ.ஈ.எஸ். கலைக்கல்லூரி கிருட்டினகிரி இரண்டாம் பரிசு ரூ 2000/-,
அ.வேல்முருகன் செயின் ஜோன்ஸ் கல்வியியல் கல்லூரி மூன்றாம் பரிசு ரூ1000/-,
மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பெரியார் குறித்த நூல்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், கிருட்டினகிரி ஒன்றிய கழக தலைவர் த.மாது, ஒன்றியச் செயலாளர் கி.வேலன், ஆலப்பட்டி சட்டக்கல்லூரி மாணவர் இர. அஜய்குமார், ஜெ.முருகன், மா.பவித்ரா, பெரியார் பிஞ்சுகள் மா.அறிவுச்செல்வன், மா.அன்புச் செல்வன், வே. அதியன், அ.சஞ்சனா, அ.சஞ்சை உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இறுதியில் வேப்பனபள்ளி ஒன்றிய பகுத்தறி வாளர் கழக நிர்வாகி ஜெயின் நன்றி கூறினார்.
