ஆவடி, நவ. 4- ஆவடி மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன் னிட்டு மழலையர்களுக்கான பேச்சுப்போட்டி ஆவடி பெரியார் மாளிகையில் 2-11-2025 அன்று மதியம் 2-30 மணிக்கு நடைபெற்றது.
நிகழ்வில் செயின்ட் மோசஸ் மெட்ரிகுலேசன் பள்ளி அய்ந்தாம் வகுப்பு மாணவர் அமுதன்- கடவுள் மறுப்பு மற்றும் மானம் கெடுப்பாரை கவிதையும், ஹுசைன் மெமோரியல் பள்ளி முதலாம் வகுப்பு மாணவர் தமிழ்லெனின் – எந்த மனிதரும் கீழானவரல்ல என்ற தலைப்பிலும், ஆவடி அரசு மகளிர் மேனிலைப் பள்ளி நான்காம் வகுப்பு மாணவர் இனியன் – வங்கத்து தாகூர் போல என்ற கவிதையும், இரண்டாம் வகுப்பு மாணவர் நன்னன் – பாரதிதாசனின் நூலைப்படி என்ற கவிதையும், போரூர் மாநகராட்சி அரசுப் பள்ளி அய்ந்தாம் வகுப்பு மாணவி மிரியம் என்கிற தேஜாசிறீ – தீ பிழம்பே என்ற தலைப்பிலும், இரண்டாம் வகுப்பு மாணவி எபி என்கிற பிரியதர்ஷினி-பாரதிதாசன் கவிதையும், கோயில்பதாகை ஆவடி மாநகராட்சி தொடக்கபள்ளி நான்காம் வகுப்பு மாணவி பிரபாகரனி – பசுமை பற்றிய கவிதை மற்றும் பெரியார் பொன்மொழிகளையும், ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலய மேனிலைப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவர் லவின் பிரைவ், எட்டாம் வகுப்பு மாணவி நித்யா ஆகியோர் பாரதிதாசன் கவிதை மற்றும் பெரியார் பொன்மொழிகளையும், மதுரவாயல் அரசு நடுநிலைப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி அறிவழகி-பெரியார் சிந்தனைகளையும் யு.கே.ஜி மாணவர் அன்பழகன்-பெரியாரைப் பற்றிய கவிதையும், ம.கோ.ஆதிரா – மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்ற வாசகமும், எபினேசர் மார்கஸ் இன்டர்நேஷனல் பள்ளி நான்காம் வகுப்பு மாணவர்கள் மித்ரன், முகிலன் ஆகியோர் பெரியார் பொன்மொழிகளையும், வி.கிட்ஸ் ப்ரீ ஸ்கூல் யு.கே.ஜி மாணவர்கள் ஆதி, ஆதன் ஆகியோர் தொண்டு செய்து பழுத்த பழம் பாடலையும் வாசித்தனர்.
மழலையர்களை பாராட்டி ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன், துணைத்தலைவர் மு.ரகுபதி, துணைச்செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், கழக பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ், ஆவடி நகர கழக தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராமலிங்கம், ஆவடி மாவட்ட கழக மகளிர் பாசறை செயலாளர் அன்புச்செல்வி, கழக தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், மழலையர் பெற்றோர் சார்பாக நந்தினி, கோயில்பதாகை ஆகியோர் பாராட்டி வாழ்த்திப் பேசினர்.நிகழ்வில் ஆவடி நகர கழக துணைத்தலைவர் சி.வச்சிரவேல், திருநின்றவூர் நகர கழக செயலாளர் கீதாராமதுரை, மாவட்ட கழக இளைஞரணி துணைத்தலைவர் கலைவேந்தன், துணைச்செயலாளர் சென்னகிருட்டிணன், திருநின்றவூர் நகர கழக இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன் உள்பட கழக தோழர்களும் மற்றும் மழலையர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஆவடி மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசனின் தீவிர முயற்சியில் நடந்த நிகழ்வை பூவிருந்தவல்லி பகுதி கழக செயலாளர் தி.மணிமாறன் தொகுத்தளித்தார்.
இறுதியாகப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவியர் களுக்கு ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன் சார்பாக பணமுடிப்பும் மாவட்ட கழக இளைஞரணி சார்பாக கேடயமும் வழங்கி மழலையர்களையும் அவர்களது பெற்றோர்களையும் மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்தனர்.
இறுதியாக பட்டாபிராம் பகுதி கழக தலைவர் இரா. வேல் முருகன் நன்றி கூற இனிதே நிறைவுப் பெற்றது.
