சட்ட எரிப்புப் போராட்டம் விளக்கிப் பிரச்சாரம் மேற்கொண்ட தந்தை பெரியார் கைது செய்யப்பட்ட நாள் இன்று (6.11.1957)
1957ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று நடைபெறவிருந்த ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போராட்டம் பற்றி தோழர்களிடம் விளக்கி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருந்த தந்தை பெரியார் அவர்கள், வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறி இதே நாளில் (6.11.1957) திருச்சி பெரியார் மாளிகையில் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை, பசுபதிபாளையம், திருச்சி ஆகிய இடங்களில் வன்முறை தோன்றியதாக இபிகோ 323, 324, 325, 436, 302, 117 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக்கூறி சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
