சென்னை, நவ.5 திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக மேனாள் அமைச்சர் க. பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிர்வாக நியமனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றன.
