டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகாரை ஒரு உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவோம், தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் உறுதி.
* பீகாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி வாக்குறுதி
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘10% பேர் கட்டுப்பாட்டில் ராணுவம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள்’… பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு. தனியார் நிறுவனங்கள், நீதித்துறை, அதிகார வர்க்கம் மற்றும் ஆயுதப் படைகளில் ஒடுக்கப்பட்ட ஜாதிகள், பழங்குடியின சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவமே உள்ளதாகவும், மக்கள் தொகையில் 10% பேர் மட்டுமே இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தி இந்து:
* “பீகாரில் பாஜக-ஜேடியூ அரசு 20 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. இன்றும் கூட, பீகாரில் ‘மருமகள்கள் மற்றும் மகள்கள் பாதுகாப்பாக இல்லை’ என்று மோடி ஜி கூற வேண்டியிருந்தால், 20 ஆண்டுகளில் பீகாரைப் பாதுகாப்பானதாக மாற்ற வில்லை என்பது அவரது சுய ஒப்புதலாகும்!” என மல்லிகார்ஜூன கார்கே சாடல்.
டெக்கான் ஹெரால்ட்:
* எஸ்அய்ஆரை எதிர்த்து மேற்கு வங்கத்தில் பேரணி: தகுதியான ஒரு வாக்காளரை நீக்கினாலும் மோடி அரசு கவிழும்: முதலமைச்சர் மம்தா அதிரடி
– குடந்தை கருணா
