திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகி, வள்ளியூர் மிசா கா.சிவனுபாண்டியன் (வயது 99) வயது மூப்பு காரணமாக 3.11.2025 அன்று மறைவெய்தினார். வள்ளியூர் திராவிடர் கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறப்பட்டது. நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன், வள்ளியூர் நகர பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வெள்ளைப்பாண்டி, வள்ளியூர் நகர கழகச் செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
