திருநெல்வேலி, நவ.4 நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும், அதிமுகவின் (ஓ.பி.எஸ். அணி) முக்கிய பிரமுகருமான பி.எச். மனோஜ் பாண்டியன், இன்று (4.11.2025) காலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ் நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவரின் இம்முடிவு, தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
மனோஜ்பாண்டியன், தமிழ்நாடு அரசியலில் மிகவும் செல்வாக்கு பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏற்ெகனவே 2001–2006இல் சேரன்மகாதேவி சட்டமன்ற உறுப்பி னராகவும், 2010–2016 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
பாஜகவின் மதவாத அரசியலுக்கு எதிரான முக்கிய நகர்வு
தற்போது, தென்காசி மாவட்டம் முழு வதும் பாரதிய ஜனதா கட்சியின் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், பாஜகவின் தலைவரும், நெல்லை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தலைமையில், தென் மாவட்டங்களில் மதரீதியான அரசியலைத் தூண்டி, பாஜகவை பலப்படுத்தவும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில், தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்கவரும், அதிமுகவின் பிரபல மான முகமுமான மனோஜ்பாண்டியனின் திமுக வருகை, பாஜகவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான ஒரு முக்கிய அரசியல் நகர்வாக (Counter Strategy) கருதப்படுகிறது.
இவரது இந்த இணைவு, ஆலங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திமுகவின் செல் வாக்கை மேலும் வலுப்படுத்தவும், அதிமுக – பா.ஜ.க. கூட்டணியின் தோல்விக்கும் உதவக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
