24.10.2025 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியில் கேஜி மழலையர்கள் பலூன் விழா கொண்டாடினர். இவ்விழாவினைப் பள்ளி முதல்வர் இரா. கீதா தொடங்கி வைத்தார் . பல வண்ண பலூன்களை ஊதி வளையங்களுக்குள் சேகரித்து அழகாக விளையாடினர் வகுப்பறை முழுவதும் வண்ண பலூன்கள் அழகாக காட்சியளித்தன. பலூன்களை வைத்து பல்வேறு விளையாட்டுகளை மழலையர்கள் விளையாடினார்கள். ஆசிரியர்கள் மழலையர்களை உற்சாகப்படுத்தி ஊக்கமளித்தனர். மழலையர்கள் இவ்விழாவினை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். மேலும் இவ்விழாவானது மழலையர்களின் மகிழ்ச்சி, ஒற்றுமை, உணர்வை, வளர்க்கும் விதமாக அமைந்தது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளி முதல்வர் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
