டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறுத்தாவிட்டால் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆர்.எஸ்.எஸ்.,ஒரு பதிவு செய்யப்பட்ட இயக்கம் அல்ல; அது தனது வரவு – செலவு கணக்குகளை பொதுவில் வெளியிட வேண்டும், கருநாடகா அமைச்சர் கார்கே பேட்டி.
*ஜாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு.
* ஆந்திரா கோயில் கூட்ட நெரிசல் பலி, கடவுள் செயல் என்கிறார் கோயில் உரிமையாளர் ஹரிமுகுந்த் பாண்டா.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தல் ஆணையத்தால் முன்மொழியப்பட்ட நாடு தழுவிய வாக்காளர் சிறப்புத் திருத்தம், அரசியலமைப்பு அல்லது சட்டப்பூர்வ அனுமதியைக் கொண்டிருக்கவில்லை, அவர்களின் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட விதிவிலக்கான அதிகாரங்களை நீட்டிக்கிறது. இது நடைமுறை சீர்திருத்தம் என்ற போர்வையில் பெரிய அளவிலான வாக்குரிமையை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் மேனாள் ஒன்றிய அமைச்சர் மணீஷ் திவாரி.
*பீகார் தேர்தலில் இந்தியா (மகாகத்பந்த்ன்) கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், தேஜஸ்வி உறுதி.
* முதுகலை மருத்துவ மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களில் 85% உள்ளூர் இடஒதுக்கீட்டுக்கு தெலங்கானா அரசு ஒப்புதல்.
தி இந்து:
* பாஜக கூட்டணி அரசு பீகாரில் 20 ஆண்டு ஆட்சி செய்தும் அவல நிலை ஏன்? காங். கேள்வி: “உங்கள் ஆட்சியில், பீகாரில் ஏராளமான வினாத்தாள் கசிவுகள், ஆட்சேர்ப்பு-நுழைவுத் தேர்வு மோசடிகள் நடந்தன. பீகாரில் லட்சக்கணக்கான இளைஞர்களின் கடின உழைப்பும் எதிர்காலமும் ஏன் சமரசம் செய்யப்பட்டது? மக்கள் தொகையில் 64%, அல்லது தோராயமாக 9 கோடி மக்கள், இன்னும் ஒரு நாளைக்கு 67 ரூபாயில் மட்டுமே வாழ்கின்றனர்” காங்கிரஸ் சரமாரி கேள்வி.
தி டெலிகிராப்:
*பீகார் வேலையின்மை அவலம்: பீகாரில் 2.7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன, இந்த லட்சணத்தில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு கோடி அரசு வேலை அளிப்போம் என நிதிஷ் – மோடி கூட்டணியின் வாக்குறுதி ஒரு வெற்று முழக்கமே.
– குடந்தை கருணா
