செந்துறை, நவ. 3- அரியலூர் மாவட்டம். செந்துறை வட்டம். நிண்ணியூர் கிராமத்தைச் சார்ந்த மறைந்த சாமிநாதன் அவர்களுடைய துணைவியாரும், இராசாத்தி, செந்துறை சா.இராஜேந்திரன், சாஇராஜகோபால், சா. இராதா, சா.பகுத்தறிவாளன், சா.தங்கசாமி, சா.செந்தாமரை ஆகியோரின் தாயார் சா.தையல்நாயகி அம்மையார் (வயது 86) அவர்கள் 17.10.2025 அன்று இயற்கை எய்தியதையொட்டி அம்மையாரது நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி செந்துறை தோப்பேரி பகுதியில் உள்ள சாமி திருமண கூடத்தில் 02.11.2025 காலை 10.00 மணியளவில், கழக சொற்பொழிவாளர் வை. நாத்திக நம்பி தலைமையில் நடைபெற்றது. தையல்நாயகி அம்மையார் உருவப் படத்தினை அவரது மூத்த மகள் இராசாத்தி முருகேசன் திறந்து வைத்தார்.
செந்துறை இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்று தாயாரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ச.அ. பெருநற்கிள்ளி திமுக மாநில கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர், ஆ.வந்திய தேவன் மதிமுக அமைப்பு செயலா ளர், மு. கோபாலகிருஷ்ணன் கழக மாவட்டச் செயலாளர், பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி ஞானசேகரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலையேற்றனர்.
மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன். சி.காமராஜ் காப்பாளர். தங்க.சிவமூர்த்தி மாநில ப.க. அமைப்பாளர். மு.ஞானமூர்த்தி உலக திருவள்ளுவர் கூட்டமைப்புத் தலைவர். ஆ.புரட்சிக்கொடி திருச்சி அண்ணா பல்கலைக்கழக மருந்தியல் துறை தலைவர் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.
திமுக அரியலூர் மாவட்ட செயலாளர், போக்குவரத்து மற்றும். மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பங்கேற்று அம்மையாரின் படத்திற்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.
சு.மணிவண்ணன் காப்பாளர், வி.எழில்மாறன் ஒன்றியச் செயலாளர் திமுக, சி.சிவக்கொழுந்து அரியலூர் ஒன்றியத் தலைவர், த.செந்தில் ஒன்றியச் செயலாளர், மு.முத்தமிழ்ச் செல்வன் செந் துறை ஒன்றியத் தலைவர், ராசா. செல்வகுமார் ஒன்றியச் செயலாளர், அரியலூர் மூத்த வழக்குரைஞர்கள் பழனியாண்டி, ஏ.என்.மணி, இரத்தின.இராமச்சந்திரன் பொதுக்குழு உறுப்பினர், பொன்.செந்தில்குமார் மாவட்ட துணை செயலாளர், கீழமாளிகை பா.இளங் கோவன், வெ.இளவரசன் மாவட்ட தொ.அணி தலைவவர், மா.சங்கர் மாவட்ட வி.அணி தலைவர், ஆ. இளவழகன் மாவட்ட வி.அணி செயலாளர், லெ. தமிழரசன் மாவட்ட இ.தலைவர், வி.ஜி.மணிகண்டன் மாவட்ட இ.செயலாளர், தியாக. முருகன் ஆண்மடம் ஒன்றிய தலைவர், புழல் விஜயகுமார். சோழவரம், ப.சக்கரவர்த்தி கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் – நதியா கும்மிடிப்பூண்டி மாவட்ட மகளிர் அணி செயலாளர், புழல் சோமு. புழல் நகரத் தலைவர், ஜகத் விஜயகுமார் புழல் ஒன்றிய தலைவர், தோழர் அலெக்ஸ், செனாய்நகர் இராவணன், திரு.வி.க பேச்சு பயிலரங்க பூங்கா அமைப்பாளர் குணசேகரன், கா. தங்கராசு மதிமுக. மணப்பத்தூர் பூ.கலைமணி சி.கருப்புசாமி வை.சுந்தரவடிவேல் உள்ளிட்ட கழகத் தோழர்களும், உறவினர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
நிறைவாக குடும்ப சார்பாக
சா. இராஜகோபால் நன்றி கூறினார்.
