பட்டுக்கோட்டை, நவ. 3- 02.11.2025 அன்று மாலை 05:30 மணியளவில் பட்டுக்கோட்டை. கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில். சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகத்தில் பட்டுக் கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று கருத்துரை யாற்றினார்.
நகரத் தலைவர் பொறியாளர் சிற்பி.சேகர்,அனைவரையும் வர வேற்று உரையாற்றி னார்.
மாவட்ட துணைத் தலைவர் முத்து.துரை ராஜன், கடவுள் மறுப்பு கூறினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாவட்ட காப்பாளர் அரு.நல்லத்தம்பி, மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
பொதுக்குழு உறுப் பினர் இரா.நீலக்கண்டன், பேராவூரணி நகரத் தலைவர் சி.சந்திரமோகன், மாவட்ட புரவலர் என்.கே.ஆர்.நாராயணன், மாவட்ட ப.க. இரத்தினசபாபதி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் சி.ஜெகநாதன், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் பெ.அண்ணாதுரை, ஒன்றியத் துணைச் செயலாளர் ஜி.சரவணன், ப.க. ஒன்றியத் தலைவர் சிவஞானம், பேராவூரணி ப.க. ஒன்றியச் செயலாளர் கனக.ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை ப.க.நகரத் தலைவர் வே.அழகரசன், ஆகியோர் கலந்துகொண்டு கருத் துகளை தெரிவித்தனர்.
பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் சி.ரெங்கசாமி, நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
கழக ஆர்வலரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நன்மதிப்பை பெற்ற பேராவூரணி விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர் கவிஞர் மு.மோகனின் வாழ்விணையர் மோ. சாந்தி, பட்டுக்கோட்டை சீரிய பகுத்தறிவாளர் தங்கா குருதியகம் உரிமை யாளர் தங்கவேலின் அன்னையார் ஆகியோர் மறைவிற்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் செலுத்துகின்றது.
23-10-2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு பட்டுக்கோட்டை மாவட்ட கழகச் சார்பில் நிதி திரட்டி நவம்பர்-27 அன்று மாலை பட்டுக்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ 10,00.000 வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டத்தை பட்டுக்கோட்டையில் நவம்பர்-27 அன்று மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும். பட்டுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர், அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
