தருமபுரி, நவ.3 தமிழ்நாட்டைக் காட்டிப் பீகாரில் பேசிய வெறுப்புப் பேச்சை, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவாரா? என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இன்று (3.11.2025) தருமபுரியில் நாடாளு மன்றத் தி.மு.க. உறுப்பினரின் இல்ல மணவிழாவில் பங்கேற்று தி.மு.க. தலை வரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரை யாற்றினார்.
அவரது உரை வருமாறு:
நேற்றைய தினம் (2.11.2025) மிக முக்கி யமான தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சென்னையில் நடத்தி முடித்துவிட்டு, நானும், நம்முடைய தொல் திருமாவளவன் அவர்களும், மற்றவர்களும் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறோம்.
நேற்று (2.11.2025 நாம் அந்தக் கூட்டத்தைக் கூட்டி பல்வேறு கருத்துகளை, ஆலோசனைகளை எல்லாம் வழங்கி இருக்கிறோம். முக்கியமான தீர்மானத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம் – என்ன என்பதும் உங்களுக்குத் தெரியும்.
நான் உறுதியாக சொல்கிறேன், பா.ஜ.க. எப்படிப்பட்ட சதிச்செயலைச் செய்தாலும், அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது என்பதை அழுத்தந்திருத்தமாக நான் குறிப்பிட விரும்புகிறேன்.
பீகாரில், பிரதமர் மோடியின் வெறுப்புப் பேச்சு!
அதனால் தான் தங்களுடைய திட்டங்கள் தமிழ்நாட்டில் எதுவும் எடுபடவில்லை என்ற ஆத்திரத்தில் தான் நம் மீது இருக்கின்ற வன்மத்தில், இப்போது என்ன பேசுகிறார்கள், அதிலும் குறிப்பாக, பிரதமர் மோடி அவர்கள் பீகார் மாநிலத்திற்குச் சென்று என்ன பேசியிருக்கிறார்? தான் எல்லோருக்குமான பிரதமராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் மோடி அவர்கள், ஆனால், அங்கே என்ன பேசுகிறார் என்று சொன்னால், தமிழ்நாட்டைக் காட்டி பீகாரில் வெறுப்புப் பேச்சைப் பேசியிருக்கிறார்.
நான் கேட்கிறேன், பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் பேசிய அதே கருத்தை, இங்கே தமிழ்நாட்டில் வந்து பேச முடியுமா? பேசுவாரா? பேசக்கூடிய தைரியம் இருக்கிறதா? என்ற கேள்வியை தான் நான் கேட்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் 2026 இல்
தி.மு.க. ஆட்சி
மீண்டும் அமையப் போவது உறுதி!
யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், எவ்வளவு போலிச் செய்திகளை எல்லாம் அவர்கள் உருவாக்கினாலும், நான் தெளிவோடு சொல்கிறேன் – இங்கே நம்முடைய தொல் திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்டது போல, 2026 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி நிச்சயம் அமையும் அமையும் என்று நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அன்றைக்கு அனைத்து ஊடகங்களிலும் “திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தது”! என்ற செய்திதான் வரப்போகிறது! அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் காரணமாக இதை நான் தெளிவோடு சொல்ல விரும்புகிறேன்.
2026 தேர்தல்,
பா.ஜ.க. – அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாக்கக்கூடிய தேர்தல்
ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் எல்லாம் உறுதுணையாக, உற்றத் துணையாக இருக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டு, 2026 தேர்தல், தமிழ்நாட்டை பா.ஜ.க. – அ.தி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாக்கக்கூடிய தேர்தலாக அமையப் போகிறது.
கலைஞரின் உடன்பிறப்புகளாக இருக்கக்கூடிய நீங்கள் நிரூபிக்கவேண்டும்; அதற்கான வெற்றிக்கு நீங்கள் உழைக்க வேண்டும்!
– இவ்வாறு தி.மு.க. தலைவரும், முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
