திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள “பெரியார் உலகம்”வசூல் பணியில் ஈடுபட்ட கழக பொறுப்பாளர்கள் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட தலைவர் விஎஸ்டிஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் மு.இளமாறன், நாகை நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், நாகை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, நாகை நகர செயலாளர் சண்.ரவிகுமார் 31-10-2025 அன்று நாகை மாவட்டத்தில் செ.கவிதா நாகை மாவட்ட மகளிர் பாசறை தலைவர், தெ.செந்தில்குமார்-நாகை நகர தலைவர், முருகானந்தம் – மேலாளர், இரா.முத்துகிருஷ்ணன் – மாநில பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர், சண்.ரவிகுமார் – நாகை நகர செயலாளர், ஆசிரியர் பு.அலமேலு – மாவட்ட மகளிரணி தலைவர், சையது யாசிர், மருத்துவர் கவுபத் மர்லியா, பொரவச்சேரி, குஞ்சுபாபு சின்னதுரை – நாகை ஒன்றிய செயலாளர் ஆகியோரைச் சந்தித்தனர்.
பெரியார் உலக நிதிக்கான துண்டறிக்கையை வழங்கி பெரியார் உலகம் பற்றிய சிறப்புகளை தோழர்கள் கூறியதை அன்புடன் ஏற்று பெரியார் உலகத்திற்கு தாங்களும் பங்களிப்பு வழங்குவதாக மகிழ்வுடன் தெரிவித்தனர்.
