பார்ப்பனியத்தின் ஒவ்வொரு புரட்டையும் அம்பலப்படுத்த ஆயிரம் அப்பணசாமிகள் தேவை! அறிஞர்கள் தேவை!

‘‘அகஸ்தியர் எனும் புரளி” நூல் வெளியீட்டு விழாவில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலாசிரியருக்குப் பாராட்டுரை!

சென்னை,நவ.2, ‘‘நூலாசியர் அப்பணசாமி அகஸ்தியர் எனும் புராணீகரை சல்லி சல்லியாக உடைத்துப் போட்டு விட்டார். இனி நாம் அதில் சாலை அமைக்க வேண்டியதுதான்” என்று “அகஸ்தியர் எனும் புரளி” நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரை வழங்கினார். நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உயிர் பதிப்பகம் சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் 1.11.2025  அன்று மாலை 6 மணியளவில், மூ.அப்பணசாமி எழுதிய, “அகஸ்தியர் எனும் புரட்டு” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. தோழர் ஏ.சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். எழுத்தாளர்
எஸ்.பாலபாரதி மேடை நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

முதல் நிகழ்வாக திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூலை வெளியிட, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் கே.பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். சென்னை பல்கலைக் கழக  தமிழ்த் துறை  மேனாள் பேராசிரியர் வீ.அரசு, தொல்லியலாளர் மார்க்சிய காந்தி, எழுத்தாளர் சுகுணா திவாகர், திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் ஏற்புரை வழங்கினார் நூலாசிரியர் மூ.அப்பணசாமி. திரைப்பட இயக்குநர் ச.திருக்குமரன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்வின் சார்பில் மேடையிலிருந்த பெருமக்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் நூலாசிரியருக்கு பொன்னாடையணிவித்து மரியாதை செய்தார்.

தமிழ்நாடு

முன்னதாகவே திராவிடர் கழகத் தலைவர் சிறப்புரை வழங்கினார். ”ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பன்னாட்டு மனித நேய மாநாட்டின் பணிகள் காரணமாக முன்னதாக பேசி விட்டு விடைபெற இருப் பதற்கு பொருத்தருள்க” என்ற வேண்டுகோளுடன்  தொடங்கினார். மேலும் அவர்,,”வரலாறு நெடுக பார்ப்பனியம் நெகிழ்வுத் தன் மையைக் கடைபிடித்து வருகிறது. அது தனக்கு எதிரான கருத்துகளை முதலில் அ\லட்சியப்படுத்தும்; இருட்டடிப்புச் செய்யும்; தவிர்க்க முடியாமல் போனால் எதிர்க்கும்; முடியவில்லை என்றால் திரிபு வாதம் செய்யும்; அதுவும் வெற்றி பெற முடியவில்லை எனில் அணைத்து அழிக்கும்; இப்படித்தான் புத்தரை அரவணைத்து பவுத்தத்தை அழித்தது”  என்று பார்ப்பனியத்தின் தன்மையை சுருக்கமாகவும், எளிமையாகவும் விளக்கினார்.

தொடர்ந்து அவர், “அப்படித் தான் புராண மாந்தர்களை வரலாற்று மாந்தர்களாக சித்தரித்தது; அப்படித் தான் அறிவியலுக்கு எதிராக போலி அறிவியலை கட்டமைத்தது; அப்படித்தான் தத்துவத்தை மதமாக மாற்றியது” என்று பார்ப்பனியத்தை கோர முகத்தை தோலுரித்துக் காட்டினார். மேலும் அவர், “அகஸ்தியர் எனும் புரளி’ நூலுக்கு ”புரட்டு” என்று வைக்காமல் ”புரளி” என்று வைத்திருக்கிறார்.

புரளி என்றால் ஆளாளுக்கு பொறுப்பில்லாமல் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படித்தான் பார்ப்பனியம் இயங் கிக் கொண்டிருக்கிறது. ஆகவே தலைப்புக்கே நூலாசிரியரை பாராட்டலாம்” என்றார். அதைத் தொடர்ந்து, 1970 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக இருந்த சிவராஜ் (பிள்ளை) எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை  பிடிஎப் வடிவில் படித்துவிட்டுத்தான் நூலா சிரியர் அப்பணசாமி அகஸ்தியரை சல்லி சல்லியாக உடைத்துப் போட்டிருக்கிறார். இனி நாம் அந்த ஜல்லியைப் பயன்படுத்தி சாலை போட வேண்டியதுதான் பாக்கி” என்று உவமித்துப் பாராட் டினார். தொடர்ந்து தந்தை பெரியார் எழுதிய, “அகஸ்தியர் ஒரு ஆராய்ச்சி”, புரட்சிக் கவிஞர் எழுதிய, “அகஸ்தியன் விட்ட புதுக்கரடி” உள்ளிட்ட நூல்களின் மேற்கோள்களை எடுத்துரைத்து, பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த இது போன்ற ஆயிரம் அப்பணசாமிகள் தேவை! ஆயிரம் அறிஞர் பெருமக்கள் தேவை!” என்று நூலாசிரியரை பலபட பாராட்டிப் பேசி தமது உரையை நிறைவு செய்துவிட்டு விடைபெற்றுச் சென்றார்.

நிகழ்ச்சியில் பன்னாட்டு தமிழ் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், கழக கிராமப் பிரச்சாரக் குழுவின் \மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், திராவிடர் கழக தொழில்நுட்ப பிரிவின் அமைப்பாளர் வி.சி.வில்வம், ஊடகவியலாளர்கள் முரளிகிருஷ்ணன் சின்னதுரை, உடுமலை வடிவேல் மற்றும் பவானி, கலைமணி, அரும்பாக்கம் தாமோதரன் உள்ளிட்ட ஆய்வா ளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *