ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் அன்னையர் நாளையொட்டி தஞ்சை மேயர் நேரில் வாழ்த்து

2 Min Read

அரசியல்

தஞ்சாவூர்,மே15 – ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், அன்னையர் தினத்தில் தாயையும், குழந்தைகளையும் வாழ்த்தி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கினார்.

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் வடகரைப் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் – திலகா இணையருக்கு திருமணம் நடந்து 6 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. 

நேற்று (14.5.2023)அன்னையர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன், 3 குழந் தைகளின் தாயான திலகாவுக்கு ஊட்டச் சத்துப் பையை அவரது வீட்டுக்கே சென்று கொடுத்து அன்னையர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பகால பரிசோதனைகளை திலகா வுக்கு மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் ஒரே சமயத்தில் 3 சிசுக்கள் கருத்தரிப்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் ஜனனி முறையான கர்ப்பகால பரிசோ தனைகள் மற்றும் தொடர் கண்கா ணிப்பை திலகாவுக்கு செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து திலகாவுக்கு 3 ஆண் குழந்தைகள் அரசு இராசா மிராசுதாரர் மருத்துவமனையில் பிறந்தன. முதல் குழந்தை 1.5 கிலோ, இரண்டாவது குழந்தை 1.3 கிலோ, மூன்றாவது குழந்தை 1 கிலோ என்ற அளவில் பிறந்தன. இதனையடுத்து செவிலியர் ஜனனி, திலகாவுக்கு மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்பு காலத்தில், இல்லம் ரீதியான சிசு பராமரிப்பு மற்றும் கவனிப்பு திட்டத்தின் கீழ், சிசுவின் எடை அளவு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், தடுப்பூசி உள்ளிட்டவற்றை முறையாக 1, 3, 7, 14, 21, 28 மற்றும் 42 ஆகிய நாட்களில் மேற்கொண்டதால் 3 குழந்தைகளின் எடையும் தற்போது 1.8 கிலோ, 1.7 கிலோ, 1.4 கிலோ என்ற அளவில் அதிகரித்து நலமுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று (14.5.2023) திலகாவின் வீட்டுக்குச் சென்ற மேயர் சண்.ராமநாதன், திலகாவின் கணவர் கார்த்திகேயன் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்களின் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு தேவையான வாழ்வாதார முன்னேற்ற உதவிகளை செய்து தருவ தாக தெரிவித்ததோடு, அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றிய மருத்துவக் குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். அன்னையர் நாளில் நடை பெற்ற இந்த நெகிழ்வான சந்திப்பை அறிந்த அந்தப் பகுதி பொதுமக்களும், திலகாவின் உறவினர்களும் மேயருக்கு நன்றி தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *