ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read

கேள்வி 1: ‘‘இது தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. ஆட்சி” “இது தான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” முதற்கட்டத் தொடர் பயணத்தில் மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது.

  – அ. திருநாவுக்கரசு,  திருநெல்வேலி.

ஆசிரியர் விடையளிக்கிறார்

பதில்:   மக்களின் பேராதரவு  நமது முடியாத பயணங்களுக்கு என்றும் கிடைக்கும். அது தந்தை பெரியார் தொண்டின் விளைச்சல்;
மகிழ்வோம்!

கேள்வி 2.  ‘‘அனைத்து எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால், வருகிற (2026) சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கே மீண்டும் வெற்றி என மக்கள் பேசுகின்றனர்’’ என்று ஓ. பன்னீர்செல்வம் கூறி இருப்பது மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடா?

   – ஆர். பாலசுந்தரம்,  போடிநாயக்கனூர்.

பதில்: அவரது அரசியல் தெளிவையும், அதே நேரத்தில் அவரது ஏக்கத்தையும் காட்டும் உண்மையாகும்.

கேள்வி 3.  ‘‘தமிழ்நாட்டுக்கு அனைத்து வகைகளிலும் ஒன்றிய அரசு அநீதி இழைக்கிறது’’ என்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குற்றச்சாட்டை தமிழ்நாட்டு மக்கள் கவனத்தில் இருத்திக்கொண்டு சட்டமன்றத் தேர்தலில் (2026) ஒன்றிய அரசுக்குத் தக்க பாடம் புகட்டு
வார்களா?

       – அன்னலட்சுமி,  அரூர்.

பதில்: நிச்சயம் உணர்ந்துள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. – அடகு கட்சியின் கூட்டணி இணைப்பே மக்களுக்குப் புரிய வைப்பதற்கு நல்ல கைமேல் நெல்லிக்கனியாகி உள்ளது. அதியமானான மக்கள், தி.மு.க.  அவ்வைக்கு அதனை 2026இல் வழங்கி மகிழ்வது உறுதி!

கேள்வி 4.  ‘‘ஒன்றிய அரசை எதிர்த்துப் பேசி கைதட்டல் வாங்கலாம், மக்களிடம் வாக்குகள் வாங்க முடியாது’’ என்று ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கூறியிருப்பது பற்றி…?

 – கு. இராஜேஸ்வரி,  கடப்பாக்கம்.

பதில்: அவரது சொந்த அனுபவத்தின் வெளிப்பாடு! தாராபுரம், நீலகிரி சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்குக் கிடைத்த பாடத்தை மாற்றிச் சொல்லி மகிழ்கிறார்!!

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 5.  ‘‘பீகார் இளைஞர்களின் கனவுகளை நிதிஷ்குமார் அரசு நசுக்கிவிட்டது’’ என்ற ராகுல்காந்தி அவர்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் பீகார் தேர்தலில் இளைஞர்கள் காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து வெற்றிவாகை சூடச் செய்வார்களா?

– மு. கவுதம்,  பெங்களூரு. 

பதில்: தற்போது பீகாரில் ராகுல் – தேஜஸ்வி அலைதானே வீசுகிறது! மோடி, அமித்ஷாவின் பதற்றமே அதற்கான அரசியல்
அடையாளங்கள்!!

கேள்வி 6.  எளிய குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவியும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த
வருமான கார்த்திகா, ஆசிய இளையோர்
கபடிப் போட்டியில் இந்திய அணியில்
பங்கேற்று தங்கம் வென்றிருப்பது உணர்த்துவது என்ன?

– ம. சுசிலா,  மேட்டுக்குப்பம்.

ஆசிரியர் விடையளிக்கிறார்

பதில்: ஆற்றல், திறமை – அக்கிரகாரத்திற்கும், பண மூட்டைகளுக்கும்- பரம்பரைச் சொந்தமல்ல. முயன்றால், உழைத்தால் வெற்றி என்பது நியதி. ஆற்றல், ஆளுமைத்திறன் எவரிடமும் உண்டு. அதற்கான வாய்ப்புத் தருகையில் அவை வெளிவரும் என்பதற்கு அந்த வெற்றிச் சிங்கம் எடுத்துக்காட்டு!

கேள்வி 7.  தமிழ்நாட்டில் ஒலிக்கின்ற எதிர்ப்புக் குரல்களையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்களர் பட்டியல் திருத்தப் பணி (நவம்பர் 4) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதே?

 – ஆர். சுதாகர், சூளூர்பேட்டை.

ஆசிரியர் விடையளிக்கிறார்

பதில்: இறுதியில் சிரிப்பவர்களே உண்மை வெற்றியாளர்கள். இப்போது விழிப்புணர்வு பிரச்சாரமும், களங்களுமே முக்கிய தேவை. தமிழ்நாட்டில் எந்நாளும் ‘பீகார்த்தனம்’ வெல்லாது!

கேள்வி 8.  த.வெ.க.தலைவர் விஜய் வழங்கிய ரூ. 20 லட்சத்தை, கரூர் சங்கவி என்ற பெண்மணி திருப்பி அனுப்பித் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பது எதைக் காட்டுகிறது?

  – ச. சத்தியா,  கரூர்.        

பதில்: 20 லட்சமா? தன்மானமா? என்பதில் அந்த எளிய குடும்பத்து பெண்ணிடம் – விஜய் தோற்றுப்போய் விட்டாரே! போதாதா? பணத்தால் உண்மையான தன்மானத்தை விலைக்கு வாங்கிவிட முடியாது என்பது புரிகிறதா?

கேள்வி 9. மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பீகாரில் சாலைகள், தொழில் முதலீட்டில் கவனம் செலுத்துவோம் என்று பா.ஜனதா அமைச்சர் நிதின் நபின் கூறியிருப்பதைக் கேட்டு மக்கள் நகைப்பார்கள் அல்லவா?

 – எ. ஏகாம்பரம்,   ஏனாத்தூர்.

பதில்: வாயால் அல்ல….!

கேள்வி 10.  நெல் கொள்முதல் நிலையங்களில் ஒன்றியக் குழு ஆய்வு செய்வது, விவசாயிகளுக்குப் பயன் அளிக்குமா?

 – ச. தங்கமணி,  தஞ்சாவூர்.

பதில்: ஆணவத்தின் வெளிப்பாடே அதிகாரத் ‘துஷ்பிரயோகம்’!. பேரிடர்கள் ஏற்பட்ட போது, இரண்டு குழுக்கள், நிதியமைச்சர் எல்லாம் வந்தார்களே தவிர, தந்தாரில்லையே! தமிழ் மண் –  வாக்காளர்கள் மறப்பார்களா?

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *