புதுடில்லி, மே 15 – கருநாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலோடு, பஞ்சாப், உ.பி., ஒடிசா, மேகாலயா மாநிலங்களில் காலியாக இருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடை பெற்றது. இவற்றில் பஞ்சாப், ஒடிசா மாநி லங்களில் பாஜக அடி வாங்கியுள்ளது. பஞ்சாபில் ஜலந்தர் மக்களவைத் தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 58 ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கு காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் கட்சி கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற நிலையில், பாஜக நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடிசாவின் ஜார்சுகுடா சட்டப்பேர வைத் தொகுதியில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டி யிட்ட பாஜக சுமார் 49 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந் துள்ளது. உத்தர பிரதேசத்தில் சான்பே, சுவார் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிளுக்கு நடைபெற்ற தேர்தலில், பாஜக வின் கூட்டணி கட்சியான அப்னா தளம் (சோனேலால்) வெற்றி பெற்றுள்ளது. மேகாலயாவின் சோஹியாங் சட்டப்பேரவைத் தொகுதியில் அய்க்கிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.