மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசனின் தாயாரும், மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந.தேன்மொழியின் மாமியாரும் ஆகிய இர.இலட்சுமி அம்மாள் (வயது 95) அவர்கள் 28.10.2025 அன்று மாலை 6:50 மணிக்கு இயற்கை எய்தினார். அன்னாரின் விழிகள் கொடையாக வழங்கப்பட்டன. இன்று (29.10.2025) மாலை 4 மணிக்கு சி.எம்.சி மருத்துவமனைக்கு உடற் கொடை வழங்கப்பட்டு இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட தலைவர் வி. இ.சிவக்குமார், தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, த.மு.மு.க கட்சிகளின் தோழர்கள் இரங்கல் உரையாற்றினர். மாவட்ட கழக செயலாளர் உ.விஸ்வநாதன், கு.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் ச.கலைமணி, சி.லதா, மாவட்ட ப. க தலைவர் மருத்துவர் பழ. ஜெகன்பாபு, மாவட்ட செயலாளர் வினாயகமூர்த்தி, க.அணிகசலயத் அலீம், நகர தலைவர் சி.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் இ.தமிழ் தரணி, மாவட்ட துணைச் செயலாளர் மு.சீனிவாசன் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
குறிப்பு: மறைவுச் செய்தி அறிந்ததும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், இர.அன்பரசனைத் தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
