சென்னை, அக்.28 சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 28.10.2025 அதிகாலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் பெய்து வரும் பருவமழையின் தாக்கம் மற்றும் நிவாரணப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் விதமாக, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மய்யத் துக்கு நள்ளிரவு நேரத்தில் அவர் சென்றார். அங்கு, பொதுமக்கள் அளித்த புகார்கள், அதன் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கணினித் திரைகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குறிப்பாக, நகரில் உள்ள சுரங்கப் பாதைகள், மழை நீர் கால்வாய்களில் நீர் சீராக செல்வது மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றப்படும் பணிகள் குறித்து எல்.ஈ.டி திரைகள் மூலமாகத் தீவிரமாகக் கண்கா ணித்தார். மேலும், 1913 என்ற உதவி எண்ணுக்கு வரும் பொதுமக்களின் புகார்களைத் தாமே நேரடியாகக் கேட்ட றிந்ததோடு, புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாழ்வான பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் நீரை அகற்றுவது, நிவாரண மய்யங் களைத் தயார் நிலையில் வைத்திருப்பது, மழையின் தீவிரத்தைக் கண்காணித்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளையும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அவர் வழங்கினார்.
மழைக்கால முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளையும், நிவாரணப் பணிகளையும் உறுதி செய்யும் வகையில் துணை முதலமைச்சரின் இந்த திடீர் அதிகாலை ஆய்வு அமைந்தது.
