மறைமலைநகர், அக். 27- செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 25-10-2025 அன்று நண்பகல் 2 மணி அளவில் மறைமலைநகர் ரம்யா மகாலில் கழக மாவட்டத் தலைவர் அ.செம்பியன் தலைமையில் மாவட்ட செயலாளர் ம.நரசிம் மன் வரவேற்பு உரையு டன் மாநில ஒருங்கிணைப் பாளர் வி.பன்னீர்செல்வம் நோக்கவுரையுடன் நடைபெற்றது. தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு வெற்றிக்கு உழைத்த களப்பணியாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பெரியார் பெருந் தொண்டர் தாம்பரம் தி.ரத்தினசாமி அவரது இணையர் ஆதிலட் சுமி ஆகியோர் மறை வுக்கு இரங்கல் தெரிவிக் கப்பட்டது.
மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா மாநாட்டில் பங்கேற்று மாநாட்டு வெற்றிக்கு உழைத்த அனைத்துத் தோழர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது
திருச்சி சிறுகனூரில் உருவாகி வரும் “பெரியார் உலகம்” நிதியாக ரூபாய் 10 இலட்சம் வழங்கவும், அதற்காக அனைத்துத் தோழர்களும் முழுவீச்சாக இறங்கி நன்கொடை திரட்டும் பணியில் ஈடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இயக்க ஏடுகள் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகியவற்றுக்கு சந்தா சேர்த்தல், மாணவர் அணி, இளைஞர் அணி, மகளிர் பாசறை, மகளிர் அணி அமைப்புகளை உரு வாக்கவும், வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்படுகிறது.
மறைமலை நகர் நகராட்சியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்றதன் நினைவாக “நூற்றாண்டு நினைவு வளைவு” நிறுவ அதற்கான முயற்சிகளை நகராட்சி மூலமாக மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
கலந்துரையாடல் கூட்டத்தில் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இறுதியாக மறைமலை நகர் நகர கழக தலை வர் திருக்குறள் ம.வெங்க டேசன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
