தாம்பரம் கழக மாவட்டக் காப்பாளர் தி.இரா. இரத்தினசாமி அவர்கள் மறைந்த 10ஆவது நாளில் அவரது வாழ்விணையர் தி.இரா. ஆதிலட்சுமி அம்மையார் (வயது 75) நேற்று (23.10.2025) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உண்டு.
செய்தி அறிந்த உடன் தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் வே.பாண்டு, மாவட்ட காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், கருப்பையா, குணசேகரன், கழகப் பேச்சாளர் இராம..அன்பழகன், தாம்பரம் மாவட்ட மகளிரணி தலைவர் நாகவள்ளி, மீனா நாத்திகன், மதியழகன், எஸ்.ஆர்.வெங்கடேஷ், சன் சரவணன், தமிழினியன், ஆனந்தன், கலைச்செல்வன், கூடுவாஞ்சேரி கோ.இராசு, உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
தலைமைக் கழகத்தின் சார்பில் பொருளாளர்
வீ.குமரேசன், அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.
இன்று காலை 9 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.
