சென்னை, அக். 24– தமிழ்நாட்டில் நெல் கொள் முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயம் செய் வதற்காக மத்தியக்குழு வருகை தரவுள்ளது.
அதிகபட்ச ஈரப்பதம்
தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. மழைப்பொழிவும் தொடங்கி விட்டது. பல்வேறு மாவட் டங்களில் மழை தீவிரமாக பெய்துவருகிறது. சம்பா, தாளடி, பிசானம் பருவ நெல் சாகுபடிப் பணிகள் முழுவீச் சில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 22-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தமிழ்நாட் டில் இயல்பு மழையைவிட 82 சதவீதம் கூடுதலாகவும், ராணிப்பேட்டை, நெல்லை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காலம் தஞ்சாவூர், தென்காசி, விருதுந கர் உள்ளிட்ட 15 மாவட்டங் களில் இயல்பு மழையைவிட 100 சதவீதத்திற்கும் அதிகமாக வும் பெய்துவருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 808 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டு மொத்தம் 1819 நிலையங்கள் செயல்பட்டு வருகின் றன மழை அதிகமாகபெய்து வரும் நிலையில், நெல் கொள்முதலுக்கான அதிகபட்சஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது.
மத்திய அரசு கடிதம்
இந்த கடிதத்தின் அடிப்ப டையில் ஒன்றிய நுகர்வோர் விவகாரம், உணவு, பொது வினியோக அமைச்சகம், ஒ்றிய அரசின் உணவு தரக் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் கடந்த 19-ஆம் தேதி எழுதிய கடிதத்தில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தின் அள வில் தளர்வை அளித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
யார் யார்?
இதற்காக இந்த அமைச்சகத்தின் தலா 3 அதிகாரிகளைக் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு குழுவில் ஒரு துணை இயக்குநர் மற்றும் 2 தொழில்நுட்பஅலுவலர் இடம் பெறுவர்.
முதல் குழுவில் ஷாகி, ராகுல் சர்மா, தனுஜ் சர்மா, 2-ஆம் குழுவில் பி.கே.சிங், ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா: 3-ஆம் குழுவில் பிரீத்தி (உதவி இயக்குநர்), பிரியா பட், அனுபமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பரிந்துரை
அவர்கள் தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, நெல் மாதிரிகளை சேகரிப்பார்கள். அவர்களுடன் இந்திய உணவுக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உடனிருப்பார்கள்.
அந்தக் குழு உடனடியாக செயல்பாட்டில் இறங்குவார்கள், அவர்கள் கொண்டு வரும் மாதிரி நெற்கள். இந்திய உணவுக் கழகத்தின் சோதனைக்கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதனடிப்படையில் அவர்கள் அளிக்கும் அறிக்கையும், பரிந்துரைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றிய அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
