அய்யோ பாவம் அய்யப்பன்! தாமிரம் என்று கூறி 200 பவுன் தங்கம் சுருட்டல் : அதிகாரி கைது

திருவனந்தபுரம், அக். 24- சபரிமலை கோவிலில் தங்கம் அபகரித்த வழக்கில் அதிகாரியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர், தாமிரம் என கூறி 200 பவுன் தங்கத்தை களவாடிய செய்தி அம்பலமாகி உள்ளது.

தங்கம் அபகரிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதானத்தில் துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த கவசம் தங்க முலாம் பூசப்பட்டவை. இந்த கவசத்தை புதுப்பிப்பதற்காக உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் மூலம் சென்னைக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் சபரி மலைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த கவசத்தில் இருந்த 200 பவுன் தங்கத்தை உன்னி கிருஷ்ணன் போற்றி மற்றும் அப்போதைய திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் அபகரித்தது தற்போது அம்ப லமாகி உள்ளது. இது தொடர்பாக 10 பேர் மீது சிறப்பு விசாரணை குழுவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேனாள் அதிகாரி கைது

இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உன்னி கிருஷ்ணன் போற்றியை அதிரடியாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் திருவிதாங்கூர் தேவஸ்தான மேனாள் நிர்வாக அதிகாரி முராரிபாபுவை நேற்று முன்தினம் (22.10.2025) கைது செய்தனர். இவர் தான் தங்கம் அபகரிக்கப்பட்ட சமயத்தில் அதிகாரியாக இருந்தவர். இந்த விவகாரம் விசாரணைக்கு வந்ததும் ஏற்கனவே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

துவார பாலகர் சிலை கவசங்கள் சென்னைக்கு அனுப் பப்பட்டபோது சபரிமலை பதிவேட்டில் தாமிரத்திலா னது என முராரிபாபு பதிவு செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

உயர் அதிகாரிகள் மீது…

மேலும் விசாரணையின் போது முராரிபாபு, சபரிமலையில் தங்கம் மோசடி செய்யப்படவில்லை எனவும், தந்திரியின் கடிதத்தின் அடிப்படையில் தான், நான் பதிவேட்டில் அப்படி குறிப்பிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த பதிவேட்டை சரிபார்ப்பது, தனக்கு மேல் பதவியில் உள்ள அதிகாரிகள் தான். அப்போதே அவர்கள் அதனை சரிபார்த்து நிவர்த்தி செய்து இருக்கலாமே  என சிறப்பு விசாரணை குழுவிடம் தெரிவித்துள்ளார். எனவே இந்த விவகாரத்தில் முக்கிய அதிகாரிகளும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *