மத்திய பிரதேசம் இந்தூரில் நீர்ச்சத்துக் குறை பாட்டால் இறந்த குழந்தையை இந்தூர் மருத்துவ மனையில் இருந்து, அவரது ஊருக்கு உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார் அவருடைய அப்பா. ‘‘பணம் தந்தால் தான் ஆம்புலன்ஸ்” என்று கூற, நடந்தே தனது மகளின் உடலை வீட்டிற்குக் கொண்டு சென்றபோது, வழியில் வந்த ஒருவர் அவரையும், அவரது இறந்த மகளின் உடலையும் அவரது ஊருக்கு எடுத்துச் செல்ல உதவினார்.
பசுமாட்டிற்கு ஜனவரி மாதம் ரூ.120 கோடிக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்த மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவு கானுக்கு, ஏழைச் சிறுமியின் உடலை எடுத்துச் செல் வதற்கு ஆம்புலன்ஸ் வழங்க மனம் வர வில்லை. இந்தப் படம் சமூக வலைதளத்தில் வெளியான பிறகு, வழக்கம்போல் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்தூர் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.