சென்னை, அக். 24- ஜாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவதற்கு பரிந்துரை வழங்குவதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் கே.என்.பாஷா தலைமையிலான ஆணையத்தை அமைத்திட தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளதை ஆதித்தமிழர் பேரவை வாழ்த்தி வரவேற்கிறது என அதன் நிறுவனர் – தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறி யிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஜாதி மத மறுப்பு திருமண இணையர்கள் தொடர்ச்சியாக ஜாதி ஆணவக் கொலைகளுக்கு ஆளாவதும், ஜாதி வெறி தாக்குதலுக்கு ஆளாவதும் தொடர்ந்து வருகிறது.
சமூகத்தில் ஒருவருக்கொருவர் கலந்துவிடக் கூடாது என்று அவர் ஜாதிக்குள் அவரவர் உட் பிரிவுக்குள்தான் இரத்தக் கலப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் ஜாதிப்புனிதம் கெட்டுவிடும் என்ற அளவுகோல் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது.
அறிவியலுக்கு ஒவ்வாத பிற் போக்கு தனங்களால் இந்தியச் சமூகத்தில் அகமணமுறை விளங்கு வதால் ஜாதி மறுப்புத் திருமணங்கள் கொடூரமான வன்முறைகளுக்கு இரையாகி வருகின்றது. குறிப்பாக ஜாதி கவுரவத்தால் பெற்ற பிள்ளை களையே படுகொலை செய்யும் அளவிற்கு ஜாதிய பெருமிதம் அதிகரித்திருக்கிறது.
மேலும் தீண்டாமை வன் கொடுமைகளால் பாதிக்கப்படும் சமூகங்களாக பட்டியல் சமூகம் இருந்தாலும் கூட ரத்தக்கலப்பை ஏற்காமல் இவர்களுக்குள்ளேயே கொலை செய்யும் அளவிற்கு வன் மமும் தாக்குதலும் பெருகியிருக்கிறது. உதாரணத்திற்கு கண்ணகி முரு கேசன் தொடங்கி அழகேந்திரன் வரை பட்டியல் ஜாதி ஆணவக் கொலையால் பலியாகியிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.
அதேபோல பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குள்ளேயும் ஜாதி பொருளாதாரம் வேலைவாய்ப்பு பாலின வேறுபாடு போன்றவற் றையும் சுட்டிக்காட்டி ஆவணப் படுகொலைகளும் நடந்து கொண்டிருப்பது வேதனையளிக் கிறது.
ஜாதி ஆணவக் கொலைகள் தனி நபர்களால் அல்லது ஒரு குடும்பத்தினரால் மட்டும் நடத்தப் படுவதில்லை. கூடுதலாக சமூக நிர்பந்தம், ஜாதி ஆதிக்க சக்திகளின் அச்சுறுத்தால், கட்டப்பஞ்சாயத்து – ஜாதித்தூய்மை போன்ற கருத்தாக்கம் ஆகியனவும் இவற்றின் பின்புலமாக இருக்கின்றன.
ஆகவே ஏற்கெனவே உள்ள குற்றவியல் சட்டங்கள் மட்டும் போதாது தனிச் சட்டம் வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் போராடி இருக்கின்றன.
ஆகவே நமது அரசியலமைப்பு சட்டம் திரு மணத்திற்க்கான இணையை தெரிவு செய்து கொள்ளும் உரிமையை திருமண வயதை எட்டிய ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கிறது இதற்கு எதிரான படுகொலைகளையும் நிர் பந்தங்களையும் வன்முறைகளையும் மற்றும் தாக்குதலையும் தண்ட னைக்கு உள்ளாக்கும் விதமாகவும் சிறப்புச் சட்டமாகவும் ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை ஆதித்தமிழர் பேரவை மனதார வரவேற்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இரா.அதியமான் கூறியுள்ளார்.
