பெருமூளை வாதம் தாக்கப்பட்ட குழந்தைகள் பிற குழந்தைகளைவிட உடல் குறைபாடு உடையவர்கள் இவர்களின் மனதில் ஏற்படும் உணர்வுகளை வெளியே சொல்லத் தெரியாதவர்கள். இவர்களின் உள்ளத்தில் தாழ்வு மனப்பான்மை வரக் கூடாது என்பதற்காக முளைவாத குறைபாடு கொண்ட தோற்றமுடைய பொம்மையை மெட்டால் எனும் அமெரிக்க நிறுவனம் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அது செயற்கை உடலுறுப்பு கொண்ட பொம்மைகளையும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொம்மைகளையும் தயாரிப்பதாக ஙிஙிசி செய்தி நிறுவனம் கூறியது.
அனைவரையும் உள்ளடக்கிய சமு தாயத்தை உருவாக்க வேண்டும் என்ப தற்காக அது பல ரக பொம்மைகளைத் தயாரிக்கிறது. 1959ஆம் ஆண்டில் அது தயாரித்த பொம்மைகளுக்கு நீளமான கால்கள், சிறிய இடுப்பு, நீளமான கூந்தல் இருந்தன.
மெட்டால் நிறுவனம் அமெரிக்காவின் தேசிய மூளைவாத பாதிப்பினருக்காக விழிப் புணர்வு சங்கத்துடன் இணைந்து அத்தகைய குறைபாடு உள்ள உருவத்தோடு பொம்மை களைத் தயார் செய்துள்ளதாக ஙிஙிசி செய்தி நிறுவனம் கூறியது. இதன் மூலம் குழந்தைகள் உள்ளத்தில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அகலும் என்றும் கூறப் பட்டுள்ளது.