ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, தனது பேத்தியுடன் நாக்பூரில் தீபாவளியைக் கொண் டாடும் படம் ஒன்று சமூக ஊடகங் களில் பரவி வருகிறது.
ஆனால், மறுபுறம் இதே தீபாவளி நேரத்தில், அயோத்தியில் பல கோடிகள் செலவு செய்து விளக் கேற்றிய சில மணி நேரங்களிலேயே, விளக்கு எண்ணெய்க்காகவும், பூஜைப்பொருட்களுக்காகவும் கிழிந்த ஆடையுடன் தரையில் சிந்திய எண்ணெயைச் சேகரிக்கும் ஏழைச் சிறுமி ஒருத்தியின் படம் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றியத்தில் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசு குறித்த கேள்விகளை எழுந்துள்ளன.
அயோத்தியில் நடைபெறும் ‘தீபோத்சவம்’ எனப்படும் மாபெரும் விளக்கு வைக்கும் நிகழ்வுக்காக உத்தரப் பிரதேச அரசு பல கோடி களைச் செலவிட்டு வருகிறது. உத்தரப் பிரதேச அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விளக்கு எரிப்பதற்கு மட்டும் ரூ. 34.17 கோடி செலவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் தற்போது வரை, அரசின் விளம்பரங்களின்படி, ஒரு கோடியே 13 லட்சம் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு சரயு ஆற்றங்கரையில் ஏற்றப்பட்ட தீபம் மற்றும் பூஜைப் பொருட்களுக்குக் கோடிக்கணக்கில் அரசு பணம் செலவழித்த விவகாரம் அப்போது பெரும் விவாதப் பொருளானது.
இந்த விவாதங்களைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு தீபாவளிக்கு விளக்கு வைக்க அரசு ஒதுக்கும் பணம் குறித்த சரியான தகவலை உத்தரப் பிரதேச அரசு முறையாக வெளியிடவில்லை. ‘தைனிக் ஜாகரன்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, இந்த நிதியானது அயோத்தி நகர மேம்பாடு என்ற பெயரில் திருப்பிவிடப்பட்டு, அங்கிருந்து செலவழிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஊடகங்களின் தகவல்கள் மற்றும் செலவுக் கணக்குகளை வைத்துப் பார்க்கும்போது, சாமியார் அரசு ஆட்சியில் அமர்ந்த 2017 முதல் இந்த ஆண்டு வரை விளக்கு வைக்கும் நிகழ்வுக்காக மட்டும் ரூ. 100 கோடிக்கும் மேல் செலவழித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
பரவும் படங்கள் சொல்லும் பாடம்:
அயோத்தியில் மாபெரும் விளக்கு விழாக்கள் மூலமாகப் புதிய கின்னஸ் சாதனைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அந்தச் சாதனைகளின் ஒளிக் கோட்டிற்கு வெளியே, ஒருவேளை உணவுக்காகப் போராடும் குழந்தைகளின் வறுமை மாறாமல் தொடர்வது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கேள்வியை எழுப்புகிறது.
வறுமை ஒழிப்புக்கான திட் டங்களைவிட, விளம்பரத்திற்காகவும், அரசியல் நோக்கத்திற்காகவும் கோடிக்கணக்கில் அரசுப் பணம் செலவழிக்கப்படும்போது, அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலைமை மேம்படுமா என்ற சிந்தனையை இந்த இரண்டு படங்களும் ஒருசேர நம்மிடையே விதைக்கின்றன.
