பன்னாட்டு விளையாட்டுக்களத்திற்கு ஒரு வீராங்கனை

ந்தவொரு விளையாட்டும் ஒருவரின் உடல்திறன் மற்றும் மனவலிமையை வளர்க்கும். தமிழ்நாட்டின் அடையாளமான சடுகுடு ஆட்டமான கபடி விளை யாட்டிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ஆண்களே கோலோச்சி வந்த விளையாட்டுகளில் தற்போது பெண்கள் களமிறங்கி மிளிர்கிறார்கள். அப்படி கபடி விளையாட்டில் தமிழ்நாட்டின் முகமாக ஒளிர்பவர்தான் கண்ணகி நகரின் வீராங்கனை கார்த்திகா.  சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் ஒக்கியத்தில் உள்ளது கண்ணகி நகர்.  வாழ்வாதாரத்திற்காக அதிகாலை முதல் இரவு வரை பணி  செய்யும் எளிய மக்கள் வாழும் பகுதியில் இருந்து  விளையாட்டுத்துறையில் விண்மீனாகப் பிரகாசிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

ெசன்னை கண்ணகி நகர் என்றாலே  பல்வேறு விளையாட்டுக்களில் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கொண்ட நகராக  காணப்படுகிறது.  கபடி பயிற்சியாளர் ராஜி என்பவரால் பெண்கள் கபடி அணி உருவாக்கப்பட்டு, தற்போது மாநிலம் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பள்ளியில் படிக்கின்ற, விளையாட்டுத்திறமை உள்ள மாணவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு முறையான பயிற்சி யளித்து, ஊக்கமளித்து சிறந்த கபடி வீராங்கனைகளை உருவாக்கியுள்ளார் பயிற்சியாளர் ராஜி. அதில் கண்டெடுத்து உருவாக்கப்பட்டவர்தான் கார்த்திகா.

இவரின்  தந்தை கட்டடத்தொழிலாளி.தாயார் துப்புரவுப்பணியாளராக வேலை செய்கின்றனர். 6 ஆம் வகுப்பு பள்ளி மாணவியாக படிக்கும்போதே கபடி களத்தில் இறங்கி யவர். தற்போது தேசிய அணியில் இடம்பெறும் அளவிற்கு முன்னேறி யுள்ளார். இந்த அணியில் உள்ள மற்ற வீராங்கனைகளும் தேசிய அணியில் விளையாடி உள்ளனர். மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களின் அற்புத மான விளையாட்டுத் திறனால் இந்த  அணிக்கு தமிழ்நாடு முழுவதும் பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர்.   தற்போது மேலும் ஒரு மகுடமாக கண்ணகி நகர் கபடி அணி வீராங்கனை  கார்த்திகா எக்ஸ்பிரஸ் என்று ரசிகர் ளால் அழைக்கப்படும் ஆர்.கார்த்திகா  பன்னாட்டு போட்டியில் விளையாட இந்திய கபடி அணியில் இடம்பெற்றுள்ளார். இவர்  கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

இந்திய பள்ளி விளையாட்டுகள் அமைப்பு தேசிய  அளவில் நடத்திய கபடிப்  போட்டியில் (SGFI) 2023 இல்  தமிழ்நாடு அணி முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்த அணியின் கேப்டனாக தலைமையேற்று  விளையாடி சிறந்த ஆட்ட வீராங்கனை யாக தேர்வுபெற்றார். தமிழ்நாடு அணி தங்கப்பதக்கம் வெல்வதற்கு கார்த்திகாவின் ஆட்டம் முக்கியமானது. தேசிய அளவிலான போட்டிகளில் கார்த்திகா பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

2021, 2022 ஆம் ஆண்டுகளில் இளையோர் அளவில் விளையாடி வெள்ளிப்பதக்கம், 2024 ஆம் ஆண்டில் கேலோ இந்தியா (KHELO INDIA)  போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.  2024 இல் வெள்ளிப்பதக்கம் வென்ற தேசிய இளையோர் (ஜூனியர்) அணியில் இடம்பெற்றிருந்தார்.   2025 இல் தேசிய அளவி லான இளையோர் மற்றும் மூத்தோர் பயிற்சி முகாமில் பங்கேற்றார். தற்போது தேசிய அணியில் இணைந்துள்ளார்.   3 ஆவது ஆசிய இளையோர் விளை யாட்டுப்போட்டிகள் பஹ்ரைனில் அக்டோபர் 19 ஆம் தேதி முதல் 23 ஆம்  தேதி வரை நடைபெறுகிறது. இதில் 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய பெண்கள் கபடி அணியில் தமிழ்நாட்டின் சார்பில் கார்த்திகா இடம்பெற்றுள்ளார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *