மைசூரு, அக். 20- மைசூருவில் நடைபெற்ற 2 நாள் புத்தர் மாநாட்டின் நிறைவு நாளில் நடிகர் பிரகாஷ்ராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மனிதாபிமானம், சமத்துவம் குறித்து பேசியதாவது:
எந்த மதம் அல்லது தர்மம் மனிதர்களை மனிதர்களாகக் காண்பதில்லையோ, மனிதாபிமானத் தன்மையை வளர்த்துக் கொள்ளவில்லையோ, அது மதமே இல்லை. நூற்றாண்டு விழா கொண்டாடுபவர்களுக்கு மதத்தின் மூலமாகவே அடி கொடுக்க வேண்டும்.
கழுதைக்கு புத்தி வரவில்லை என்ற பழமொழியைப் போல, ஓர் அமைப்பு நூறு ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் அதற்கு இன்னும் புத்தி வர
வில்லை.
புத்தரும், அம்பேத்கரும் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால், ஒரு சிலர் கிரிக்கெட் விளையாட்டு மய்தானத்தில் இருக்கும் ஆல்ரவுண்டர் விளை யாட்டு வீரர்கள் மாதிரி, யார் அதிகமாக ரன் அடிக்கிறார்களோ அவர் பக்கம் போகிறார்கள்.
நமக்கு மனிதத்தன்மை முக்கியம். ஒரு மனிதனுக்கு துன்பம் என்று வந்தால் அவருக்கு உடனே உதவி செய்யும் மனப்பான்மையும், அவரது துன்பத்தைப் போக்கும் மனப்பான்மையும் இருக்க வேண்டும். இயற்கையை விட எந்த ஒரு கடவுளும் இல்லை.
மக்கள் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அன்பு, பாசத்தால் எல்லாவற்றையும் வெல்ல முடியும்.
ஆனால், இன்று இந்த உலகில் சமத்துவத்திற்காகப் போராட்டம் நடத்த வேண்டியது மூலமாக வெற்றியடைய முடியும். அதற்காகப் போராட்டங்களைத் தொடர வேண்டும்.
இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் பேசினார்.
