திருச்சி, அக். 20- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் ரோபோட்டிக் பயிற்சி ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி பெற்ற மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள இப்பயிற்சி பெரிதும் துணை செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளி யின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எஸ். ஜோஸ்வா கிரிஸ் ஜோயல் மற்றும் எஸ். ஜித்தேந்தர் சிங் குஜ்ரார் ஆகியோர் தானியங்கி வகையில் செயல்படும் ட்ரோன் எனும் தானியங்கி விமா னத்தை மிகக் குறைந்த செலவில் உருவாக்கி உள்ளனர்.
அந்த தானியங்கி விமானம் செயல்படும் விதத்தைப் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர், மற்றும் மாணவர் சேர்க் கைப் பிரிவின் உதவி இயக்குநர், முனைவர் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பள்ளி முதல்வர் முனைவர். க.வனிதா ஆகியோர் முன்னிலையில் செயல்படுத்திக் காட்டினர்.
மாணவர்களின் இம்முயற்சியையும், பயிற்றுவித்த ஆசிரியை திவ்யா அவர்களையும் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
