மூடத்தன தீபாவளி பண்டிகையின் கொடும் பரிசு? சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைத்து திராவிட மாடல் அரசு நடவடிக்கை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை அக்.18- தீபாவளி பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு வார்டு திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரிவித் தார்.

சென்னைஅரசு கீழ்ப்பாக்கம் மருத் துவ கல்லூரி மருத்துவ மனையில் 16.10.2025 அன்று தீபாவளி தீக்காய சிறப்பு உள் மருத்துவ பயனாளிகள் பிரிவை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். தொடர்ந்து, தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்கும்போது செய்ய கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றிய விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்.

மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி ராஜகுமாரி, அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைவர் எம்.கவிதா, கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமாரி, நிலைய மருத்துவ அலுவலர் வாணி, தீக்காய மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் மகாதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீபாவளி நெருங்கி வருவதையொட்டி பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதும், தீக்காயம் இல்லாத வகையில் தீபாவளியைக் கடக்க வேண்டும் என்கின்ற வகையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனை கள் ஆகிய இடங்களில் தீ விபத்துக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேவையான மருந்து உபகரணங்கள், போதுமான அளவில் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தீக்காய சிகிச்சையில் புகழ்பெற்ற மருத்துவமனையாக உள்ளது.  அந்தவகையில் இந்த மருத்துவமனையில் தீபாவளி தீக்காய சிறப்புப் பிரிவில் 20 படுக்கைகள் வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் 5 வெண்டி லேட்டர் கருவிகளுடன் ஆண்கள் வார்டில் 12 படுக்கைகளும், பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டில் 8 படுக்கைகளும் உள்ளன. 24 மணி நேரமும் அறுவை அரங்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் பெரியவர் களுடைய கண்காணிப்பில் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். பருத்தி ஆடைகள் அணிந்து பட் டாசு வெடிப்பது நல்லது, பட்டாசு வெடிக்கும் போது செருப்புகள் அணிந்து கொள்ள வேண்டும்  என்பன உள்ளிட்ட அறிவுறுத் தல்கள் வழங்கப் பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *