வல்லம், மே 19 -. இயந்திரவியல் துறை மற்றும் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) வல் லம், தஞ்சாவூர் மற்றும் சிறீ காமாட்சி மெடிக்கல் சென்டர், தஞ்சாவூர் வெண்டையம்பட்டி ஊராட்சியுடன் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமானது மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 13.05.2023 சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது.
இம்முகாமானது பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல் கலைக்கழக கிராமப்புற ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் முனை வர் அ.ஆனந்த் ஜெரார்டு, இயந் திரவியல் துறைத்தலைவர் பேரா.அ. புகழேந்தி மற்றும் சிறீ காமாட்சி மெடிக்கல் சென்டர், மக்கள் தொடர்பு அலுவலர் வெ.பழனிவேல் முன்னிலை வகிக்க இந்த மருத்துவ முகாமானது வெண்டையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கனிமொழி சிவக்குமார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
இம் மருத்துவ முகாமில் இரத்தப் பரிசோதனை, உடல் இரத்த அழுத்தம், எக்கோ பரி சோதனை, இ.சி.ஜி பரிசோதனை, உடல் நலம் சார்ந்த சிறப்பு மருத் துவர்கள் ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் கிராம மக்கள் பயன் பெற இலவசமாக வழங்கப்பட்டது. இம் மருத்துவ முகாமில் இராயமுண்டான் பட்டி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களிலிருந்து 103 பேர் கலந்து கொண்டு உடல் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று பயன்பெற்றனர். இம் மருத்துவ முகாமானது இயந்திர வியல் துறை உதவி பேராசிரியர் கள் பி.சீனிவாசன், ரா.உதயசங்கர் மற்றும் அ.முகம்மது இஸ்மாயில் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு, இராயமுண்டான் பட்டி தலைவர் எஸ்.கனிமொழி சிவக்குமார் மற்றும் துணை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ், உதவியுடன் ஊர் மக் கள் ஒத்துழைப்புடன் இனிதே நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் இயந்திரவியல் துறை நான்காம் ஆண்டு மாணவர்கள் சுமார் 12 பேர் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு மக்கள் நல மருத்துவ முகாமை செவ்வனே நடைபெற ஒத்துழைப்பு நல்கினார்கள், இறுதியாக மருத்துவ முகாம் முடிவில் இயந்திரயவில் துறை உதவி பேராசிரியர் ப.சீனிவாசன் அவர்கள் இம்மருத்துவ முகாம் இவ்வூர்மக்கள் பயன் பெற உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.