டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் அக்டோபர் 18இல் முழு அடைப்பு நடத்த முடிவு. எதிர்க்கட்சிகள் ஆதரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “பிரிக்கப்படாத இந்தியாவின் வேத காலத்தில், ஜாதி அமைப்பு சமூக நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்டதாம்” ம.பி. அரசின் பிரமாணப் பத்திரம் தாக்கல்.
தி இந்து:
* மோடி அரசின் புதிய பிஎப் விதிகள் கொடூரமானவை. புதிய விதிகளின்படி, 12 மாதங்கள் வேலையின்மைக்குப் பிறகே (முன்பு 2 மாதமாக இருந்தது) நீங்கள் பிஎப் பணத்தை முழுமையாக எடுக்க முடியும். 36 மாதங்களுக்குப் பிறகே (முன்பு 2 மாதமாக இருந்தது) ஓய்வூதியத்தை எடுக்க முடியும். உங்கள் சொந்த பிஎப் கணக்கில் எப்போதும் 25 சதவீத பணத்தை வைப்பு நிதியாக பராமரிக்க வேண்டும் எனும் ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*கருநாடகாவில் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைக்கு தடை: அரசு வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்வு களைத் தடை செய்யக் கோரி கருநாடகாவின் அய்.டி அமைச்சர் பிரியங்க் கார்கே முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதிய மூன்று நாட்களுக்குப் பிறகு, பொது இடங்களில் நிகழ்வுகளை நடத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் அனுமதியை கட்டாயமாக்கவும் தொடங்கியுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
– குடந்தை கருணா