சென்னை, ஆக.16 ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கலாக உள்ளதாகப் பரவும் செய்தி, முற்றிலும் வதந்தியே என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
சட்டமன்ற கூட்டத்தொடரில் ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது.
‘‘தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே. அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை’’ என்று சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்துள்ளார். ‘‘வதந்தியைப் பரப்பாதீர்!” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.