சென்னை, அக்.14 ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இடது கை துண்டிப்பு
இது தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தலைவர் சாந்தாராமன் கூறியதாவது: பீகாரைச் சேர்ந்த 28 வயதான தொழிலாளி ஒருவர், கடந்த செப்.26-ஆம் தேதி சென்னையில் ரயில் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார்.
இதில் அவரது இடது கை தோள்பட்டை வரை துண்டானது. வலது கையும் மணிக்கட்டுக்கு மேல் சிதைந்துவிட்டது. இரு கைகளும் செயல்பட முடியாத நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பேராசிரியர் மருத்துவர் பி.ராஜேஸ்வரி, உதவிப் பேராசியர்கள் உ.ரஷிதா பேகம், வி.எஸ். வளர்மதி, வி.சுவேதா, முதுநிலை மருத்துவர்கள், ஷோனு, அன்னபூரணி, விக்ரம், சந்தோஷினி, மயக்கவியல் நிபுணர் ஜி.சண்முகப்பிரியா ஆகியோர் அடங்கிய குழுவினர், அந்த நபருக்கு கைகளை மாற்றி பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ள முன்வந்தனர்.
வலதுகைக்கு மாற்றினர்
துண்டான இடது கையின் பகுதியை, வலது முழங்கையில் இணைத்தனர். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின்போது, எலும்பு கட்டமைப்பு, தசை, நரம்பு மற்றும் ரத்தக் குழாய்கள் மறுசீரமைக்கப்பட்டன. மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையின் மூலமாக வலது கையில் ரத்த ஓட்டம் செல்ல தொடங்கியது.
பின்னர், அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். கையை முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவர இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதுபோன்று கைகளை மாற்றி பொருத்தும் சிகிச்சை இந்தியாவிலேயே இதற்கு முன்பு ஒரேயொரு முறைதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் 3 சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
‘கிராஸ் ஹேண்ட் ரீ ப்ளான்டேஷன்’ எனப்படும் இந்த வகை சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை. மிகவும் சவால் நிறைந்த அந்த சிகிச்சையை அரசு மருத்துவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர். இரு கைகளையும் இழந்திருந்த அவருக்கு இந்த சிகிச்சையின் மூலம் குறைந்தபட்சம் ஒரு கை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் சோலார் கட்டமைப்புகளை நிறுவ ஒப்பந்தம்
பசுமை எரிசக்தி கழகம் அறிவிப்பு
சென்னை, அக்.14 சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவல கங்களிலும் சூரிய ஒளிமின்சார உற்பத்திக்காக 40 மெகாவாட் சோலார் கட்டமைப்புகளை நிறுவுவதற்காக பசுமை எரிசக்தி கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தினமும் பகல் நேர மின்சாரத் தேவைக்கு ஏற்ற திறனுடன் சோலார் பேனல் அமைக்க அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு முடிவு செய்து, அதற்கான திட்டத்தை அறிவித் தது. சில அரசு அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட் டுள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களிலும் தலா 40 மெகாவாட் திறனுடைய சோலார் கட்டமைப்புகளை நிறுவ தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் திட்டமிட்டது. முதல்கட்டமாக சென்னை மற் றும் புறநகர் மாவட்டங்களில் மட் டும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தப் பட்டியல் கோரப்பட்டுள்ளது. அதன் படி, அக்டோபர் 15 முதல் 27-ஆம் தேதி வரை நிறுவனங்கள் தங்களது ஒப்பந்தத்தை சமர்ப்பிக்கலாம். 28.10.2025-ஆம் தேதி ஒப்பந்தம் அடிப்படையில் விண்ணப்பங்கள் திறக்கப்படும்.
இதுகுறித்து பசுமை எரிசக்தி கழக அதிகாரிகள் கூறியதாவது
சென்னை, திருவள்ளூர் காஞ் சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட் டங்களில் உள்ள அரசு அலுவலக கட்டடடங்களில் சோலார் மின்சார கட்டமைப்புகளை நிறுவுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ற கட்டடடங்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. சென்னையில் பல இடங்களை தேர்வு செய்து ஆய்வு நடத்தி வருகி றோம். 5 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத் துகிற, அதிக மின்சாரத் தேவை உள்ள அரசு கட்டடங்களுக்கு முன் னுரிமை அளிக்கப்படும்.
ஒப்பந்தத்தில் பங்கேற்கும் நிறுவ னங்களில், ஒரு யூனிட் மின்சாரத் துக்கு குறைந்த விலைகோரும் நிறு வனத்துக்கு ஆணை வழங்கப்படும். அந்த நிறுவனம் தனது செலவில் மின் நிலையம் அமைத்து, 25 ஆண் டுகள் பராமரிக்க வேண்டும். மாதம் தோறும் உற்பத்தியாகும் மின்சாரத் துக்கான விலையை கணக்கிட்டு, பசுமை எரிசக்தி கழகம் வழங்கும். இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் அரசு அலுவலகங்களுக்கு மின் கட்டண செலவு 40-50 சதவீதம் வரை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.