பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள்: தனித் தேர்வர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு ஜனவரிக்குள் பெறாவிடில் அழிக்கப்படும்

சென்னை,அக்.12- தமிழ்நாட்டில் 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரை பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தனித் தேர்வர்கள், உரிமைக்கோராத (கேட்டுப் பெறாத) தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 2026 ஜனவரி 10ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளா விட்டால், அவை அழிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:

மாநிலப் பாடத்திட்டத்தில்…

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரை மார்ச், ஜூன், செப்டம்பர் ஆகிய அனைத்து பருவங்களிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களின் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், தேர்வர்களால் இன்னும் பெற்றுக்கொள்ளப்படாமல் உள்ளன. இந்தப் பெறப் படாத சான்றிதழ்களை 3 மாதத்துக்குள் பெற்றுக்கொள்ளா விட்டால் அழிக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கப்பட்டது. மேலும், அதற்கான கால அவகாசமாக அக்டோபர் 10ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தற்போது, உரிமைக்கோராத தனித் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த கால அவகாசம் மேலும் 3 மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டு, 2026 ஜனவரி 10ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்களைப் பெறும் முறை:

தனித் தேர்வர்கள் நீட்டிக்கப்பட்ட இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி, கீழ்க்கண்ட முகவரியில் துறை அதிகாரிகளை அணுகித் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.  துணை இயக்குநர் (மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை.

நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ பெறுவதற்கான வழிமுறை கள்:

  1. நேரில் பெறுபவர்கள்: உரிய ஆளறிச் சான்றுடன் (Identity Proof) அலுவலகத்தை நேரில் அணுகிச் சான்றிதழைப் பெறலாம்.
  2. அஞ்சல் மூலம் பெறுபவர்கள்: மேற்கண்ட அலுவலருக்கு, உரிய அத்தாட்சியுடன் (நுழைவுச்சீட்டு Hall Ticket) ரூ.45க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறையுடன் விண்ணப்பித்து மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

கால அவகாசம் நிறைவடைந்த பின்னர், எவ்வித அறிவிப்புமின்றி இந்த அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும். சான்றிதழ் அழிக்கப்பட்ட பிறகு மீண்டும் கேட்டால் நகல் மதிப்பெண் சான்றிதழ் (Duplicate Mark Sheet) மட்டுமே வழங்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *